முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிணாமூல் காங். எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சஸ்பெண்ட்

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,மார்ச்.24 - மேற்குவங்காள மாநில சட்டசபையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்றுமுதல் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபையில் இந்த 3 பேரும் ஜனநாயக முறைக்கு முரணாகவும் சபாநாயகர் ஹாசிம் அப்துல்  ஹலிமை தாக்கியதற்காகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பீர்ஹத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், திபியேந்து ஆதிகர் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் ஹாசிம் அப்துல் ஹலிம் தெரிவித்துள்ளார். 

மேற்குவங்காள சட்டசபையின் பட்ஜெட் கூட்டமும் கடைசி கூட்டமுமான இந்த கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி சட்டசபையில் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இதை சபாநாயகர் ஹாசிம் நிராகரித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டனர். கூச்சல் குழப்பமும் செய்தனர். இதனையொட்டி மறுநாள் இந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் இடது கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்தனர். இதனையொட்டி அந்த 3 பேரும் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்