முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவில் கடற்படை தளம்: இலங்கை நிறுவியது

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

யாழ்ப்பாணம்,மார்ச்.- 19 - ராமநாதபுரத்திற்கு மிக அருகில் உள்ள கச்சத்தீவில் இலங்கை அரசு சீனாவின் உதவியுடன் நிரந்தர கடற்படை தளம் அமைத்தது. அங்கு 2 போர்க்கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  ராமநாதபுரத்தில் இருந்து 13 மைல் தொலைவில் உள்ள கசச்த்தீவு உள்ளது. இது இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்தது. 1974-ல் மத்திய அரசு இதனை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது. கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரும் சிங்கள மீனவர்களும் தாக்கி வருகிறார்கள். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் அத்தீவில் நிரந்தரமாகவே கடற்படை தளம் அமைத்து வருவதாக அங்கிருந்து ஊடகங்கள் மூலம் செய்தி  வெளியானது. 2009 லேயே அங்கு கடற்படை தளம் அமைக்க இலங்கை முயன்றது. ஆனால் இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கட்டத்தீவஇல் மேற்கு பகுதியில் நிரந்தர கடற்தளம் அமைத்து இருப்பதுடன் 2 போர்க்கப்பல்களையும் நிறுத்தி வைத்துள்ளது. சீன உதவியுடன் இத்தளம் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே கிளிநொச்சி பகுதி நாச்சிக்குடா கடல்பகுதியில் கடற்படை தளம் ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்டதாக அங்கிருந்து வந்த செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் கச்சத்தீவு, வடக்கு கடற்பரப்பு, காங்கேசன் துறைமுகம் ஆகிய பகுதிகள் அன்ைத்தும் இலங்கையின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த திடீர் நடவடிக்கை தமிழக அரசுக்கும், தமிழ மீனவர்களுக்கும் கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கையின் இந்த நடவடிக்கை குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததது வியப்பாகவும் வேதனை அளிப்பதாகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்