முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பிரமருடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேச்சு

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 25 - ஜப்பான் பிரதமர் நவோடா கானுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க ஜப்பான் கூடுதலாக உதவி கேட்டால் அதை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி ஜப்பான் நாட்டில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடலில் சுனாமி பேரலைகள்  எழுந்தன.இந்த இரு இயற்கை சீற்றங்களினால் ஜப்பானில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டம் ஆகியுள்ளன.இந்த இயற்கை பேரழிவால் ஜப்பானுக்கு பல லட்சம் கோடி டாலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க ஜப்பானுக்கு இந்தியா ஏற்கனவே நிதி உதவி அளித்துள்ளது.

இப்போது கூடுதல் நிதி உதவி கேட்டால் அதையும் அளிக்க இந்தியா தயாராக உள்ளது என்று ஜப்பான் பிரதமர் நவோடாகானிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார்.

நேற்று ஜப்பான் பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது இந்த வாக்குறுதியை மன்மோகன்  சிங் அளித்தார்.

இயற்கை சீற்றங்களினால் உயிரிழப்பு மற்றும் சொத்து நஷ்டம் ஆகியவற்றுக்காக ஜப்பான் பிரதமரிடம் மன்மோகன்சிங் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக்கொண்டார்.

இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.துயரமான இந்த நேரத்தில் ஜப்பான் நாட்டின் மக்களுடன் இந்திய அரசும் இந்திய மக்களும் திடமான ஆதரவுடன் இருப்பார்கள் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

கூடுதலாக ஏதேனும் உதவி கோரினால் அதையும் செய்ய தயாராக இருப்பதாகவும் ஜப்பான் பிரதமரிடம் அவர் உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்