முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேம்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.25 - மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன்கோவில் நிர்வாகத்திற்குட்பட்ட தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி ரூ.70 லட்சம் செலவில் நடைபெற்று வந்தது. மேலும் ரூ. 7லட்சம் செலவில் மகா மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 22 ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. நேற்று காலை 11.05 மணிக்கு மேல் மாரியம்மனுக்கும் மற்றும் விமானத்திற்கும் சமகாலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு 4ம் கால யாகபூஜை நடைபெற்றது. திருக்குடத்தில் உள்ள அருள் பேராற்றலை திருமேனிக்கு உருவேற்றல், சிறப்பு பெருநிறை அவி அளித்தல், திருக்குட உலாவிற்கு சாந்திதானம் செய்தல் போன்றவைகள் நடந்தன.

   இதைதொடர்ந்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள காலபைரவர் கோவிலில் காலை 11.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பத்மநாபன், அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்