முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை மிரட்டும் வகையில் சீனா குண்டுவீசி ஒத்திகை

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

பெய்ஜிங், மார்ச்.24 - இந்தியாவை மிரட்டும் வகையில் சீன ராணுவம் இமய மலை பகுதியில் குண்டுகளை வீசி ஒத்திகையில் ஈடுபட்டது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்கனவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவை மிரட்டும் வகையில் சீன ராணுவம் இமய மலையையொட்டி திபெத் பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. சீன விமானப் படையினர் குண்டுகளை வீசி ஒத்திகை நடத்தினர். இதற்காக சீனா ஜெ 10 ரக குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தி உள்ளது. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த போர் ஒத்திகை நடைபெறுவதாகவும் இது போன்ற ஒத்திகை நடப்பது இதுவே முதல் தடவை என்றும் சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

சீனாவின் இந்த போர் ஒத்திகை இந்தியாவை மிரட்டும் வகையில் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்திய எல்லையில் சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. சீனாவின் இந்த செயல்கள் இந்தியாவையும் பதில் நடவடிக்கையில் இறங்க செய்யும் பலமான சிக்னலாக இருக்கிறது என்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்