முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் சிங்கிற்கு சியோலில் உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

சியோல்,மார்ச்.25 - தென்கொரியாவுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சியோல் நகரில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொழில் வளர்ந்து வரும் இந்த காலத்தில் மின்சார தேவையும் அதிகரித்து வருகிறது. இதற்கு அணுமின்சார உற்பத்தி அவசியமாகிறது. அதேசமயத்தில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யும்போது பாதுகாப்பும் அவசியமாகிறது. இதுதொடர்பாக தென்கொரியாவின் தலைநகரான சியோல் நகரில் அணு பாதுகாப்பு குறித்த 12-வது உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் சியோல் நகருக்கு நேற்று சென்றுள்ளார். முன்னதாக சியோல் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்து மன்மோகன் சிங்கை வரவேற்றனர். உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் மன்மோகன் சிங், தென்கொரியா நாட்டு அதிபர் லீ மயூங் பாக்வையும் சந்தித்து பேசுகிறார். அப்போது இந்தியா-தென்கொரியா இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருதருப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துகொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளிடையே முக்கிய துறைகள் மற்றும் பொருளாதார உறவு தொடர்பாக ஒரு விரிவான ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. மேலும் தற்போது இருநாடுகளிடையே விசா வழங்கும் முறை கடினமாக உள்ளது. இதை எளிதாக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இருநாட்டு மக்களிடையே தொடர்பை அதிகரிப்பது, விஞ்ஞானம், தொழில்நுட்பம், இரு நாடுகளின் பாதுகாப்பு, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருதலைவர்களும் பேச்சவார்த்தை நடத்த உள்ளனர். ஜப்பான் மாதிரி தென் கொரியாவும் தொழில் முன்னேற்றம் அடைந்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்