முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிராக கருத்து தெரிவித்தால் அடி: இலங்கை அமைச்சர்

திங்கட்கிழமை, 26 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு, மார்ச். 26 - இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் கருத்து தெரிவித்து விட்டு நாட்டுக்குள் காலடி வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைத்து விடுவேன் என்று இலங்கையின் அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். கிரிபத்கொடை என்ற இடத்தில் ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மிர்வின் சில்வா பேசியதாவது,  போர்த்தல் ஜயந்த் எனும் ஊடகவியலாளரை நான்தான் இலங்கையில் இருந்து விரட்டியடித்தேன். இத்தகைய ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்பதித்தால் அவர்களின் கை, கால்கள் அடித்து உடைக்கப்படும். எங்கிருந்து சுனாமி வந்தாலும் ராஜபக்சேவிடம் இருந்து எனக்கெதிராக சுனாமி வராது. என்னை அவர் மட்டுமே பதவியில் இருந்து விலக்க முடியும். ராஜபக்சேவை சிறுவயதில் இருந்தே எனக்கு தெரியும். அவர்கள் இந்த நாட்டின் மன்னர்கள். அந்த மன்னர்கள் என்னை நம்புவர். எனக்கு எதுவும் நடந்து விடும் என்று நான் கவலைப்படவில்லை. எனக்குப் பின்னால் என் மகனை இந்த நாட்டுக்காக ஒப்படைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்