முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்-1 விசாக்களை வழங்க இந்தியா நிறுவனங்கள் கோரிக்கை

திங்கட்கிழமை, 26 மார்ச் 2012      வர்த்தகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச். 26 - அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு அலுவலகங்களில் இருந்து பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கான எல் - 1 விசாக்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று இந்திய அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எல் - 1 விசா தாமதத்தால் நிறுவனங்களின் வர்த்தகமும், வளர்ச்சியும் தடைபடுகிறது என்பதால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பது இந்த நிறுவனங்களின் கோரிக்கை. இது தொடர்பாக ஒபாமாவுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தேவையற்ற எதிர்பாராத தாமதங்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் உருவாக்குவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய தாமதங்கள் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் கூறியுள்ளன. விப்ரோ டெக்னாலஜிஸ், டாடா அமெரிக்கா இண்டர்நேஷனல், டாட்டா கன்சல்டன்சி, டவ் கெமிக்கல்ஸ், செவரான் அமெரிக்கா உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இந்த கடிதத்தில் அமெரிக்க வர்த்தக சபையும் கையெழுத்திட்டுள்ளது. 2005 ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரையில் 6 முதல் 7 விழுக்காடு எல் - 1 பி விசாக்கள் மறுக்கப்பட்டன. 2006 ல் இது அதிகரித்து 22 விழுக்காடாகவும், 2011 ல் 27 விழுக்காடாகவும் உயர்ந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்