முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுதம் இல்லாத உலகமே அணுபாதுகாப்புக்கு உத்தரவாதம்

புதன்கிழமை, 28 மார்ச் 2012      வர்த்தகம்
Image Unavailable

 

சியோல்,மார்ச்.28 - அணு ஆயுதம் இல்லாத உலகமே அணு பாதுகாப்புக்கு ஒரு சிறந்த உத்தரவாதம் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆலோனை கூறியுள்ளார். தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் அணுபாதுகாப்பு உச்சி மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் சீனா, ரஷ்யா,அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் உள்பட பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பாக பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் அணு ஆயுதம் இல்லாத உலகமே அணு பாதுகாப்புக்கு ஒரு சிறந்த உத்தரவாதம் என்று கூறி மேற்கத்திய நாடுகள் மற்றும் சீன நாடுகளின் நெற்றியில் ஒரு போடு போட்டார். அணு ஆயுதத்தை குறைக்கவும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதிலும் ஒரு சர்வதேச விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கினால் அணு ஆயுத உற்பத்தி குறையும். அணுபாதுகாப்புக்கு உத்தரவாதமும் கிடைக்கும் என்றும் மன்மோகன் சிங் கூறினார். உலகில் அணு ஆயுதத்தை அடியோடு ஒழிக்க ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு திட்டத்தை அமுலபத்த வலியுறுத்தினார். அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க அணு ஆயுத நாடுகள் உள்ளடக்கிய ஒரு திட்டத்தையும் விதிமுறைகளையும் வகுத்து செயல்படுத்த வேண்டும். ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அணு எரிபொருள் கழிவை அணு ஆயுதம் தயாரிக் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதை விரைவில் அமுல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். அணு சப்ளை நாடுகள் குழு, ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்பாடு நாடுகள் கூட்டமைப்பு, ஆஸ்திரேலியா குழு உள்பட 4 அமைப்புகளில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் வலியுறுத்தினார். அணு ஆயுதம் தொடர்பான உயர் தொழில்நுட்பம் பரவ இந்தியா ஒருபோதும் காரணமாக இருந்ததில்லை. அதேசமயத்தில் சர்வதேச தரத்தில் எங்கள் நாட்டு தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் மன்மோகன் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்