முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,மார்ச்.25 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

* தாய்மார்களுக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர் மூன்றும் இலவசம் இது அல்லது அது என்றில்லாமல் மூன்றுமே இலவசமாக தரப்படும்.

 

*குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.

 

*கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ 2,500 ஆக உயர்த்தப்படும். 

 

* அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்படும்.

 

*விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி.

 

*அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம்.

 

* கிராமங்கள் தோறும் நடமாடும்மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

 

*தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு பெண்களின் திருமாங்கல்யத்திற்கு 

4 கிராம் தங்கம் இலவசம்.

 

* நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் .

 

* வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட 3 செண்ட் இடம் தரப்படும்.

 

* தடையில்லா மின்சார வசதி.

 

*சூரிய ஒளி மூலம் இலவச மின்சாரம்.

 

* வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு 4 ஆடுகள் இலவசம்.

 

* வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் இலவசம்

 

* பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள்,  காலணிகள் இலவசம் .

 

* மாணவர்களின் கல்வி உதவித் தொகை ரூ. 5,000 வரை தரப்படும்.

 

* பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு லேப்டாப் கணினி இலவசம்.

 

* பள்ளி மாணவர்களை பாதுகாக்க படை.

 

* மீனவர் பாதுகாப்பு படை.

 

* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் அதில் 25 சதவீதம் மானியம்.

 

* பெண்களுக்கு மகப்பேறு கால  சலுகையாக 6 மாதம் விடுமுறை மற்றும் ரூ 12,000 நிதியுதவி.

 

* ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில் ஆதரவற்ற முதியோர் குழந்தைகளுக்கு சிறப்பு தங்கும் விடுதி மற்றும் 3 வேளை உணவு.

 

* கேபிள் டி.வி. தொழில் அரசுடமை இதன் மூலம் ஏகபோகம் தடுக்கப்படும்.

 

* இளநிலை மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ 50,000 த்துடன் 4 கிராம் தங்கம் இலவசம்.

 

* சாதி சான்றிதழ்கள் இனி பள்ளியிலேயே வழங்கப்படும்.

 

* பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை.

 

* 60,000 கறவை மாடுகள் இலவசமாக வழங்க நடவடிக்கை.

 

* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு 

செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

 

* தி.மு.க. வினர் பறித்த நிலங்கள் பறிக்கப்பட்டு அவற்றை திருப்பித் தர நடவடிக்கை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்