முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம், திருச்செந்தூர் பக்தர்களுக்கு புதிய வசதிகள்

சனிக்கிழமை, 31 மார்ச் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.31 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் சார்பாக பசுப்பட்டி தோப்பில், 91 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாகனம் நிறுத்துமிடம் மற்றும் செம்மடம் தோப்பில் மேல்நிலை ர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை, பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு அருகில் பசுப்பட்டி தோப்பில் 63,400 அடி பரப்பளவில் திருக்கோயில் நிதி 67 லட்சத்து 30 ஆயிரமும், சுற்றுலாத் துறை நிதியுதவி 24 லட்சமும் சேர்த்து மொத்தம் 91 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கான்கிரீட் தளம், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், குளியலறைகள், ஓட்டுநர்களுக்கான ஓய்வறை, உயர்கோபுர மின் விளக்குகள் ஆகிய வசதிகளுடன் கூடிய வாகனம் நிறுத்துமிடம் மற்றும் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான செம்மடம் தோப்பில் 3 கிணறுகளும், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த வாகனங்கள் நிறுத்துமிடம் உபயோகத்திற்கு வருவதன் மூலம் திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படுவதோடு வாகனங்கள் பாதுகாப்பிற்கும் பக்தர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளும், மேல்நிலை ர்த்தேக்கத் தொட்டியும் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தூய்மையான குடிநீர் பெறுவதோடு பக்தர்களின் ண்ட நாள் கோரிக்கையும் ர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக நாழிக்கிணறு மேற்குப் பகுதியில் சுற்றுலா பேருந்து நிலையம், பக்தர்கள் பயணியர் நிழலகம், திருக்கோயில் வளாகத்தில் நான்கு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள், இரண்டு குளியல் தொட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள், நாழிக்கிணற்றின் கிழக்கு பகுதியில் சுற்றுலாப் பேருந்து நிலையம் ஆகியவற்றை பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக 86,080 சதுர அடி பரப்பளவில் 72 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் நாழிக்கிணறு மேற்குப் பகுதியில் சுற்றுலா பேருந்து நிலையம், 59,180 சதுர அடி பரப்பளவில் 38 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் பக்தர்கள் பயணியர் நிழலகம், 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் திருக்கோயில் வளாகத்தில் நான்கு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள், 31 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத்துறை நிதியுதவி மூலம் நாழிக்கிணறு அருகே இரண்டு குளியல் தொட்டிகளும், ஆண்களுக்கு 38 கழிப்பறைகளும், பெண்களுக்கு 38 கழிப்பறைகளும், நாழிக்கிணறு அருகில் கிழக்குப் பகுதியில் 87,156 சதுர அடி பரப்பளவில் 87 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் சுற்றுலாப் பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.   திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக அமைக்கப்பட்ட சுற்றுலாப் பேருந்து நிலையம், பயணியர் நிழலகம், உயர்கோபுர மின்விளக்குகள், குளியலறை மற்றும் கழிப்பறைகள் ஆகியவை இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பிற்கும், வாகனங்கள் பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக அமைவதோடு திருச்செந்தூர் சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த  தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து குலசேகரபட்டினத்தைச் சேர்ந்த பக்தர் முத்தரசு பேசியதாவது:-​

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் முருக பக்தன்.  நான் அடிக்கடி சுவாமி தரிசனத்திற்காக  திருச்செந்தூர் வருவேன்.  முதல்வர் ஜெயலலிதா பக்தர்களுக்காக சுற்றுலா பேருந்து நிலையம், பயணிகள் தங்க நிழற்கூடம், குளியலறை வசதி என்று ஏகப்பட்ட வசதிகளை பக்தர்களாகிய எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார்கள்.  இதனால் பக்தர்கள், குறிப்பாக என்னைப்போன்ற வயதான பக்தர்கள் மகிழ்ச்சியா, மனநிறைவோட சுவாமி தரிசனம் பண்ண முடிகிறது.   அதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னுடைய உளங்கனிந்த நன்றியினை பக்தகோடிகளின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மழை பெய்கின்ற மாதிரி, மக்களுக்கும் சரி, பக்தர்களுக்கும் சரி ஏராளமான நன்மைகளையும், நலத்திட்டங்களையும் வாரி வழங்குகின்ற முதல்வர் ஜெயலலிதா பலகோடி நூறாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம் வல்ல முருகப் பெருமானின் திருவருளை, திருவடியை வேண்டுகிறேன். 

இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள், களப் பணியாற்றும் ஆய்வாளர்கள் ஆகிய 560 அலுவலர்களுக்கு 2 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 560 மடிக்கணினிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், ஏழு அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி, இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.   தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகள் மூலம் திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வைக்கவும், உடனுக்குடன் அரசுக்கு தேவையான விவரங்களை அளிக்கவும், அலுவலக உபயோகத்திற்கும் இந்த மடிக்கணினிகள் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago