முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சனிக்கிழமை, 31 மார்ச் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, மார்ச். 31 - பழனி பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழனி பங்குனி உத்திர திருவிழா மிகவும் முக்கியமான திருவிழாவாகும். இத்திருவிழாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் கொடுமுடி ஆற்றில் பக்தர்கள் விரதமிருந்து சிறு குடங்களில் நீரை சேகரித்து பின்பு அதை தீர்த்த காவடியாக மேளதாளங்கள் முழங்க பழனிக்கு அதை காவடியாக எடுத்து வருவார்கள். பின்பு மலைக்கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு தீர்த்த காவடி நீரை அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள். இத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். 

பழனி திருஆவினன்குடி முருகன் கோயிலில் நேற்று கொடியேற்ற நிகழ்ச்சிகள் துவங்கியது. கோயிலின் முன்புள்ள தங்க கொடிமரத்தின் கீழே புனித கலசங்களில் புனித நீரும், மாவிலைகளும், மஞ்சள் நிற தேங்காய்களும் வைக்கப்பட்டிருந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க பின்பு சேவலும், வேலும், மயிலும், சந்திரரும், சூரியரும் பொறித்த மஞ்சள் நிற கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பெருக்கில் அரோகரா என கோஷமிட்டனர். பக்தர்களின் இந்த கோஷம் விண்ணை பிளந்தது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. 

இதில் கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி, சித்தனாதன் சிவநேசன், தனசேகர், பழனிவேலு, செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வகுமார், பாஸ்கரன், மலைக்கோயில் பிரசாத ஸ்டால் அரிகரமுத்து, எம்.எல்.ஏ வேணுகோபாலு, பில்டிங் காண்டிராக்டர் நேரு, அ.தி.மு.க. நகர செயலாளர் பரதன், திருப்பூர் லாட்ஜ் மகேஷ், அரிமா சுந்தரம், தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், முருகனடிமை பாலசுப்பிரமணியம், நாடார் ஸ்டோர் பாலன், ஆயக்குடி பாரூக், நகர்மன்ற தலைவர் வேலுமணி, துணை தலைவர் முருகானந்தம், பேஸ்கார் பன்னீர் செல்வம், பன்னாடி முருகேசன், பழனி யூனியன் சேர்மன் ஏ.டி. செல்லசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்