முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு அருகே புலித்தோல் மற்றும் புலி எலும்புகளை விற்க முயன்ற 6பேர் கைது.

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

ஈரோடு, ஏப்ரல் - 9 - ஈரோடு மாவட்டம் பெருந்துரை பகுதியில் சிலர் புலிதோலை விற்க முயற்சிசெய்வதாக ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருணுக்கு ரகசிய தகவல் கிடைக்கது.  இவர்களை பிடிக்க வன ச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பெருந்துறை 4 சாலை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.   அப்போது அவ்வழியே வந்தகார் ஒன்றை அவர்கள் சோதனை செய்த போது காரில் புலித்தோலும், புலி எலும்புகளும் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவர்களை வன அதிகாரிகள் பிடிக்க முயன்ற எதிர் புரம் மோட்டார் சைக்கிளுடன்நின்று கொண்டிருந்த போது 2 நபர்கள் தப்பி ஒடிவிட்டனர்.காரில்  இருந்த 4 பேர் வனதுறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டனர். விசாரணையில் காரில்  இருந்தவர்கள் ஊட்டிகீழ் கோத்தகிரியை சேர்ந்தவர் துக்கி(வயது49)கோவை வீர கேரளாத்தைசேர்ந்த மதபோதகர் பீட்டர் குமார்(46)கோவை மருதசலத்தை சேர்ந்தவர் நாகராஜ்(36) கேரளா கோட்டயத்தை சேர்ந்தவர்சந்தேஷ்(39)என்பதும் தப்பி ஒடியவர்கள் திருப்பூரை சேர்ந்த ரகு,கார்டிரைவர் ராஜந் என்பதும் தெரிய வந்தது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள்கோவை வட வள்ளியை சேர்ந்த சுந்தராராஜ்(31) கோவை சாணர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கண்ணன்(28) என்பதும் தெரிய வந்தது.தொடர் விசாரனையில் தப்பி ஒடிய ரகு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில்  இருந்துபுலித்தோலையும் புலி எலும்புகளையும்  எடுத்துகொண்டு கண்ணன் ,சுந்தரராஜ் ஆகியோரிடம்  விற்க பெருந்துறை க்கு வந்த போது  அதிகாரிகளிடம் சிக்கி கொண்டது தெரிய வந்தது. பின் புலித்தோலை கடத்தி விற்க முயன்ற மதபோதகர் பீட்டர்குமார்,துக்கி,நாகராஜ்,சந்தோஷ்,கண்ணன்,சுந்தராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.  தப்பி ஒடிய 2 பேரையும் ரகுவின் உறவினரையும்  வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago