முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்ர் கப்பல் நிர்வாகம் நிவாரணம் வழங்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - கடந்த மார்ச் 1ம்தேதி கேரள மீனவர்கள் 6 பேர் அரபிக்கடல் பக்கத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைபடகை இடித்து தள்ளி மூன்று பேரை பலி வாங்கிய ``பிரபு தயா'' என்ற சிங்கப்ர் கப்பலை சென்னை துறைமுகத்தில் சிறைப்பிடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் 1ம் தேதி கேரளாவை சேர்ந்த 5 மீனவர்கள் அரபிக்கடலில் தனது விசைபடகு மூலம் மின் பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீர் என வந்த பிரபுதயா என்ற சிங்கப்ர் கப்பல் அந்த விசைபடகை முட்டி தள்ளியது. அதில் இருந்த 6 மீனவர்களில் 4 பேர் கடலில் முழ்கி  இறந்துவிட்டனர். இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மற்றொருவர் காணவில்லை இந்நிலையில் விசாரணை நடத்திய கடற் படையினர் பிரபு தயா என்ற சிங்கப்ரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் தான் விசைப்படகை இடித்தது என கண்டறிந்து அந்த கப்பலை அருகில் உள்ள துறைமுகத்தில் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி சென்னை துறைமுகத்தில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது. கப்பலை துறைமுகத்தில் சரண்டர் செய்தனர். இதையெடுத்து மீனவர்களின் விசைபடகு உரிமையாளர் ஜாக்கப் அந்தோணி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் தனது கப்பலை முட்டி சேதப்படுத்திய பிரபுதயா என்ற சிங்கப்ர் கப்பலின் உரிமையாளர்கள் தனக்கு 1கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.பி.கே.வாசுகி முன்பு விசாரணைக்கு வந்தது அப்பொழுது நீதிபதி, பிரபு தயா என்ற சிங்கப்ர் கப்பலை சிறைபிடிக்க வேண்டும், விசாரணை முடியும் வரை சிங்கப்ர் கப்பலை விடுவிக்க முடியாது எனவும் உத்தரவிட்டார். 

மேலும் காவலில் வைக்கப்பட்ட பிரபு தயா கப்பலின் கேப்டன் மற்றும் மாலுமி தங்களுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில் இறந்த மீனவர் ஒருவரின் மனைவியும் காயம் அடைந்தவரும், பழுதாகிய படகின் உரிமையாளரும், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கினார்.

அதில் இடித்த சிங்கப்பூர் கப்பலால் பழுதாகிய படகு உரிமையாளர்களுக்கு ரூ.55 லட்சமும், காயமடைந்த 2 மீனவர்களுக்கு தலா 12 லட்சமும், இறந்த ஒரு மீனவரின் மனைவிக்கு ரூ.25 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட கப்பலை விடுவிக்கும்படியும் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்