முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்புத்தாண்டு விழாவில் ஜெயலலிதா தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 13 - சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாளாக என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் நடந்த புத்தாண்டு விழாவில் பங்கேற்ற தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார். ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மீண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டத்தினை இயற்றியது.  இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13.4.2012  தமிழ்ப் புத்தாண்டு விழாவில்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரிகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளை புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு அவர்களின் சேவைகளை கெளரவிக்கும் வகையிலும்; இலக்கியத் துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து அதிக அளவு பாடல்களை பாடிய புலவர் கபிலரின் பெயரில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.  இதன்படி, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கு பேராசிரியர் முனைவர் அ.அ. மணவாளன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.  இதே போன்று, இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும் பெரும் முயற்சியால் கண்டறிந்து, வெளிக் கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பதிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழ் அறிஞர்களின் சேவைகளை கெளரவிக்கும் வகையில், தமிழ் தாத்தா உ.வே.சாவின்  பெயரிலான விருதிற்கு புலவர் செ. இராசு  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இந்த விழாவில், சிறந்த பெண்மணிக்கான ஒளவையார் விருது, ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டது. மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், தமிழுக்கு நற்தொண்டாற்றியதற்காக வழங்கப்படும் தமிழ்த் தாய் விருது மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் விருதுகளை தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவால் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்பட்டது. மேலும் அந்த வகையில் 2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு , அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30,000 ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதையொட்டி தமிழ்புத்தாண்டு தினமான நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்  அரசு சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காலை 8.30 மணி அளவில்  துறை தோறும் தமிழ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. காலை 9.30 மணி அளவில் முத்திரை பதிக்கும் சித்திரை என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.  பின்னர் காலை 10.30 மணி அளவில் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்தில் அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.பி.ராஜேந்திரபாலாஜி, வைகை செல்வன், மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ் புத்தாண்டு விழா 12.15 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்தாய் விருது, ஒளவையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா.விருது, திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்குப் பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா விழாப் பேருரை ஆற்றினார். மேலும் இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்கும் வகையில் 16,564 கிராமங்களிலும் விவசாயப் பெருமக்களுக்களுக்கு பண்ணை சார்ந்த அனைத்து தகவல்களும் கிடைக்கும் விதத்தில் ஒருங்கிணைந்த முகாம்கள் நடத்தப்படும். என்றும், சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து கிராமங்களிலும்  உழவர் திருநாள் கொண்டாடப்பட்டது. இது விவசாயிகளுக்கு அறுசுவை விருந்துகளும் பண்ணை சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தும் சாலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.
ஒட்டு மொத்தத்தில் தொடங்கும் புத்தாண்டு பெருவிழா அனைவரது வாழ்விலும் புது மெருகு ஊட்டி உள்ளது. விழாவில் சபாநாயகர் டி.ஜெயக்குமார், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கல்வித்துறை அமைச்சர் சிவபதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தலைமை செயலாளர் தேரேந்திரநாத் சாரங்கி வரவேற்றி பேசினார். செய்தித்துறை மற்றும் தமிழ்  வளர்ச்சித்துறை செயலாளர் ராசாராம் நன்றி கூறினார்.
விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago