முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநகரில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் தொடக்கம்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.15 - மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் திருநகர் அண்ணாபுங்ைகா மற்றும் சோழவந்தான்; மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்வதற்கான புமிை புஜையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர்.கே.ராஜீ அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்த காவிரி கூட்டு குடிநீர்த்திட்டம் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் ஆகிய மூன்று நகராட்சிகள், அ.வெள்ளாளபட்டி, பரவை, விளாங்குடி, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஆறு பேரூராட்சிகள், கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1430 ஊரக குடியிருப்புகளுக்கு பயன்தரக்கூடியதாகும்.

அவனியாபுரத்தில் 2027ம் ஆண்டு இடைக்கால மக்கட் தொகை 64383, 2042ம் ஆண்டு உச்சக்கால மக்கட் தொகை 85589 ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு, 2027ம் ஆண்டு இடைக்கால குடிநீர் விநியோகமாக நாள் ஒன்றுக்கு 3.48 மில்லியன் லிட்டராகவும், 2042ம் ஆண்டு உச்சநிலை குடிநீர் விநியோகமாக நாள் ஒன்றுக்கு 7.44 மில்லியன் லிட்டராகவும் குடிநீர் வழங்க காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த்திட்டம் வடிவமைத்து செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் 12.4 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி கட்டபட்டு இரண்டு நீர் உந்து குழாய்கள் மூலம் ஒரு 12.45 இலட்சம் லிட்டர், ஒரு 10 இலட்சம் லிட்டர், ஒரு 4 இலட்சம் லிட்டர், ஒரு 3 இலட்சம் லிட்டர் கொள்ளளவுகள் உள்ள பழைய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றி குடிநீர் வழங்க திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

அவனியாபுரம் நகராட்சிக்கான விகிதாச்சார திட்ட மதிப்பீடு தொகை ரூ.60.64 கோடியாகும்.  

திருநகரில் 2027ம் ஆண்டு இடைக்கால மக்கட் தொகை 24605, 2042ம் ஆண்டு உச்சக்கால மக்கட் தொகை 29830 ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு, 2027ம் ஆண்டு இடைக்கால குடிநீர் விநியோகமாக நாள் ஒன்றுக்கு 1.10 மில்லியன் லிட்டராகவும், 2042ம் ஆண்டு உச்சநிலை குடிநீர் விநியோகமாக நாள் ஒன்றுக்கு 1.92 மில்லியன் லிட்டராகவும் குடிநீர் வழங்க காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த்திட்டம் வடிவமைத்து செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் 3.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி கட்டபட்டு ஒரு நீர் உந்து குழாய்கள் மூலம் இரண்டு புதிய 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு 1 மூன்று இலட்சம் லிட்டர் 2 இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவுகள் உள்ள பழைய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றியும் புதிய விரிவாக்க குழாய்கள் 1.943 கி.மீ பதிக்கப்பட்டு குடிநீர் வழங்க திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

திருநகர் பகுதியில் விகிதாச்சார திட்ட மதிப்பீடு தொகை ரூ.15.04 கோடியாகும்.  

விளாங்குடியில் 2027ம் ஆண்டு இடைக்கால மக்கட் தொகை 38730, 2042ம் ஆண்டு உச்சக்கால மக்கட் தொகை 53605 ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு, 2027ம் ஆண்டு இடைக்கால குடிநீர் விநியோகமாக நாள் ஒன்றுக்கு 2.14 மில்லியன் லிட்டராகவும், 2042ம் ஆண்டு உச்சநிலை குடிநீர் விநியோகமாக நாள் ஒன்றுக்கு 4.29 மில்லியன் லிட்டராகவும் குடிநீர் வழங்க காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த்திட்டம் வடிவமைத்து செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் 7.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி கட்டபட்டு ஒரு நீர் உந்து குழாய்கள் மூலம் இரண்டு புதிய 2 இலட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு 1 இரண்டு இலட்சம் லிட்டர், ஒரு 1.50 லட்சம், ஐந்து 1 லட்சம் லிட்டர், இரண்டு 60,000 லிட்டர் கொள்ளளவுகள் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றியும் புதிய விரிவாக்க குழாய்கள் 26.806கி.மீ பதிக்கப்பட்டு குடிநீர் வழங்க திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

விளாங்குடி பகுதியில் விகிதாச்சார திட்ட மதிப்பீடு தொகை ரூ.30.4 கோடியாகும்.  

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளில் உள்ள 154 குடியிருப்புகள் இத்திட்டத்தின் கீழ் பயன்அடைய உள்ளனர்.  திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2027ம் ஆண்டு 143131 இடைக்கால மக்கட் தொகைக்கு குடிநீர் விநியோகமாக நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டராகவும் மற்றும் 2042ம் ஆண்டு 156142 உச்சக்கால மக்கட் தொகைக்கு குடிநீர் விநியோகமாக நாள் ஒன்றுக்கு 57 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க   காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த்திட்டம் வடிவமைத்து செயல்படுத்தப்படவுள்ளது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்காக ஆதிசிவன் நகர் அருகில் 3.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு அதில் 36 ஊராட்சிகளில் 5000 லிட்டர் முதல் 1.65 இலட்சம் லிட்டர் வரை கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு சுமார் 276 கிமீ தூரத்திற்கு குழாய் பதித்து கிராமங்களில் ஏற்கனவே இருக்கும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிய ஆறு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் விகிதாச்சார திட்ட மதிப்பீடு தொகை ரூ.67.45 கோடியாகும்.

அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு இடைக்கால மக்கட்தொகையான 15657 (2024)-க்கு நாள் ஒன்றுக்கு 0.48 மில்லியன் லிட்டர் மற்றும் உச்சநிலை மக்கட்தொகையான 19596 (2042)-க்கு நாள் ஒன்றுக்கு 0.80 மில்லியன் லிட்டர் குடிநீர்; வழங்க திட்டம் வடிவமைத்து மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றியத்தைச் சார்ந்த பி.மேட்டுப்பட்டியில் 25.50 லட்சம் லிட்டர் தரை மட்டத் தொட்டி கட்டப்பட்டு 9165மீ நீளமுள்ள பிரதான மற்றும் பிரிவு நீர் உந்து குழாய்கள் மூலமாக ஏற்கனவே உள்ள மூன்று 0.60 லட்சம் லிட்டர், ஒரு 0.30 லட்சம் லிட்டர் மற்றும் ஒரு 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  

அலங்காநல்லூர் பேரூராட்சிக்கான விகிதாச்சார திட்ட மதிப்பீடு ரூ.6.13 கோடியாகும்.

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில் உள்ள 137 குடியிருப்புகளுக்குண்டான இடைக்கால மக்கட் தொகையான 104221 (2027) க்கு நாள் ஒன்றுக்கு 3.74 மில்லியன் லிட்டர், உச்சநிலை மக்கட்தொகையான 113693 (2042) க்கு நாள் ஒன்றுக்கு 4.16 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க திட்டம் வடிவமைத்து மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

அலங்காநல்லூர் ஒன்றியத்திற்காக பி.மேட்டுப்பட்டி அருகில் 25.50 இலட்சம் லி;ட்டர் கொள்ளளவுள்ள தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு அதில் இந்த ஒன்றியத்திற்கான குடிநீர் பெறப்பட்டு, அலங்காநல்லூர் ஒன்றியத்தைச் சார்ந்த 37 ஊராட்சிகளில் 5000 லிட்டர் முதல் 55000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு சுமார் 176 கி.மீ நீளத்திற்கு குழாய் பதித்து குடியிருப்புகளில் ஏற்கனவே உள்ள மேல் நிலைத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள ஒரு 10000 லிட்டர் மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கான விகிதாச்சார திட்ட மதிப்பீடு ரூ.48.23 கோடியாகும்.

பாலமேடு பேரூராட்சிக்கு இடைக்கால மக்கட்தொகையான 11386 (2024)-க்கு நாள் ஒன்றுக்கு 0.42 மில்லியன் லிட்டர் மற்றும் உச்சநிலை மக்கட்தொகையான 13555 (2042)-க்கு நாள் ஒன்றுக்கு 0.60 மில்லியன் லிட்டர் குடிநீர்; வழங்க திட்டம் வடிவமைத்து மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

பாலமேடு பேரூராட்சிக்கான விகிதாச்சார திட்ட மதிப்பீடு ரூ.7.22 கோடியாகும்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளில் உள்ள 72 குடியிருப்புகளுக்குண்டான இடைக்கால மக்கட் தொகையான 61785 (2027) க்கு நாள் ஒன்றுக்கு 2.20 மில்லியன் லிட்டர், உச்சநிலை மக்கட்தொகையான 67391 (2042) க்கு நாள் ஒன்றுக்கு 2.45 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க திட்டம் வடிவமைத்து மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

வாடிப்பட்டி ஒன்றியத்திற்காக எல்லையுர்ை காலனியில் 1.05 இலட்சம் லி;ட்டர் கொள்ளளவுள்ள தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு அதில் இந்த ஒன்றியத்திற்கான குடிநீர் பெறப்பட்டு, 21 ஊராட்சிகளில் 5000 லிட்டர் முதல் 120000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட 24 தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு சுமார் 128 கி.மீ நீளத்திற்கு குழாய் பதித்து குடியிருப்புகளில் ஏற்கனவே உள்ள மேல் நிலைத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள ஒரு 20000 லிட்டர் மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வாடிப்பட்டி ஒன்றியத்திற்கான விகிதாச்சார திட்ட மதிப்பீடு ரூ.28.41 கோடியாகும்.

இக்கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ரூ.784 கோடிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.  அதனடிப்படையில் இத்திட்டத்திற்காக கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் காவிரி ஆற்றில் மூன்று நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு, 15500 எல்பிஎம் ஒ 22 மீ மின் இறைப்பான்கள் மூலம் 36.55 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்டத் தொட்டியில் நீர் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து 100.73 கி.மீ நீளமுள்ள நீர்உந்து குழாய்கள் மற்றும் இரண்டு இடங்களில் அமைக்கப்படவுள்ள இடைநிலை தரைமட்டத் தொட்டிகள் மற்றும் நீர் உந்து நிலையங்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு கோட்டையுரிைல் அமைக்கப்பட உள்ள 36.55 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்டத் தொட்டியில் நீர் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து 268.96 கி.மீ நீளமுள்ள பிரதான மற்றும் 2154.26 கி.மீ நீளமுள்ள துணை பிரதான நீர் உந்து மற்றும் தன்னோட்ட குழாய்கள் மூலமாக 332 தரைமட்ட நீர் சேகரிப்புத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள 1512 மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 78 மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாகவும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஏற்கனவே உள்ள 2468.07 கி.மீ பகி;ர்மானக் குழாய்களுடன் கூடுதலாக 71.59 கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் அமைக்கபட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் வணக்கத்திற்குரிய மதுரை மாநகராட்சி மேயர் திரு.வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) திரு.ஆறுமுகநயினார், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.முத்துராமலிங்கம்,  மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.தமிழரசன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.போஸ், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.வி.கருப்பையா, மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு.ஆர்.கோபாலகிருஷ்ணன், மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் திரு.சாலைமுத்து, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.தர்மராஜா, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.நிர்மலாதேவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீனிவேல், அலங்காநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.கீதாரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.செல்லப்பாண்டி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சந்தியாபலராமன், திரு.முத்துக்குமார், திரு.முனியாண்டி, திரு.சக்திவேல், திரு.காசிராமன், தலைமை பொறியாளர் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திரு.கோதண்டராமன், கண்காணிப்பு பொறியாளர் திரு.ராம்பாபு, நிர்வாக பொறியாளர்கள் திரு.நாகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சி.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.தேவதாஸ்போஸ், தெற்கு வட்டாட்சியர் திரு.ஞானகுணாளன், மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்