முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக்ஸ் ஆசை காட்டி நகை-பணம் சுருட்டிய போலி அதிகாரி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 15​- வேலூரைச் சேர்ந்தவர் விஜயாபானு என்ற ஷீபா மேத்யூ. இவர் தன்னை பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து நேற்று முன் தினம் விஜயா பானுவை சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விஜயா பானுவின் தந்தை ஐ.டி.பி.எல். நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். விஜயா பானு சென்னை பரங்கி மலையில் உள்ள பள்ளியில் 10​ம் வகுப்பு வரை படித்தார். அதில் பெயிலானதால் தொடர்ந்து படிக்கவில்லை. சிறு வயதிலேயே விஜயா பானுவின் நடத்தை பெற்றோ ருக்கு பிடிக்கவில்லை. இதனால் பெற்றோரை பிரிய நேரிட்டது. சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டார். 

2003​ம் ஆண்டு திருட்டு வழக்கில் போலீசில் பிடிபட்ட விஜயா பானு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது புழல் சிறையில் பெண் வார்டனாக பணியாற்றிய விதேச்சனாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

விதேச்சனா வேலூரைச் சேர்ந்தவர். கணவர் அருளானந்தம். 2 குழந்தைகள் உள்ளனர். அருளானந்தம் லிப்ட் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். அவர் பணி நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு, வெளியூர் சென்று விடுவார். இதனால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள விதேச்சனாவுக்கு ஆள் தேவைப்பட்டது. விஜயா பானு மீது இரக்கம் கொண்ட விதேச்சனா விஜயா பானு ஜெயிலில் இருந்து விடுதலையானதும் தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை நம்பி ஒப்படைத்தார். விஜயா பானு ஒரு குற்றவாளி என்பதால் அவரை வேலைக்கு வைத்துக் கொள்வது அருளானந்தத்துக்கு பிடிக்கவில்லை.

எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன்​ மனைவி இடையே தகராறு ஏற்பட்டு விவாகரத்துக் கோரும் அளவுக்கு சென்றது. இதற்கிடையே புழல் சிறையில் இருந்தபோது அங்குள்ள நடவடிக்கைகளை விஜயா பானு பார்த்துக் கொண்டார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் பெண் போலீஸ் அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட தொடங்கினார். வேலூர் ஜெயிலுக்கும் சென்று தன்னை சிறப்பு போலீஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். போலி அடையாள அட்டையை காட்டி சிறை ஊழியர்களிடம் விசாரிப்பது போல் நடித்து ஏமாற்றினார்.

சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி பெண் வார்டன் விதேச்சனா மூலம் தெரிந்து இருந்ததால் வேலூர் சிறையில் ஊழியர்களை மிரட்டி அவர்களிடம் பணம் பறித்தார். அடிக்கடி வந்து மாமூல் வாங்கிச் சென்றார். அதில் வேலூர் சிறை  ஊழியர்கள் சிலரும், பெண் கைதிகளும் பழக்கமானார்கள். அவர்களையும் சாதுர்யமாக ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார். கைதிகள் சிறையில் அடைபட்டு இருப்பதால் அவர்களது உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் உதவுவதுபோல் நடித்து ஏமாற்றினார்.

சிலரை தனது செக்ஸ் வலையில் வீழ்த்தியும் நகை பணம் மோசடி செய்துள்ளார். பெண் வார்டன் விதேச்சனாவிடம் ரூ.2 லட்சம் வரை மோசடி செய்தார். தொடர்ந்து சென்னை, வேலூரில் 20​க்கும் மேற்பட் டோரிடம் நகைகள், பணம் மோசடி செய்திருப்பதாக விஜயாபானு போலீசில் அளித்த வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அவர்களிடம் இருந்து 100 பவுன் வரை மோசடி செய்து இருக்கலாம்.

மோசடி நகை பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி வரை இருக்கும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மோசடி பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அடிக்கடி புழல் சிறைக்கு சென்று விதேச்சனாவை சந்திப்பார். அவர் வேலூர் சிறைக்கு மாற்றலானதும் அவரது வீட்டிலேயே தங்கிவிட்டார். ஆனால் விஜயா பானுவின் மோசடி அம்பலமானதால் பெண் வார்டன் விதேச்சனாவின் சகோதரர் விமல் ராஜ் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து போலி அதிகாரியாக மோசடியில் ஈடுபட்ட விஜயாபானு சிக்கினார். விஜயாபானுவின் மோசடிகளுக்கு அவரது மாமா தேவராஜன் என்பவரும் உடந்தையாக செயல்பட்டார். போலி அடையாள அட்டைகள், மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் இருப்பது போன்ற போட்டோக்களை கிராபிக்ஸ் மூலம் இவருக்கு சென்னை போட்டோ கிராபர் மதிவாணன் தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான விஜயாபானு உரிமை முரசு மாத இதழில் உதவி ஆசிரியராக பணி புரிவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான போலி அடையாள அட்டையும் அவரிடம் சிக்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்