முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகனை மீட்க கலெக்டர் பால்மேனனின் தந்தை பேட்டி

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

பெரம்பூர், ஏப்.25 - மாவோயிஸ்டுகளால் கடத்தப்பபட்டுள்ள தன் மகன் பால்மேனனை(கலெக்டர்) மீட்க முயற்சி எடுத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் சத்தீஸ்கர் மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கலெக்டர் பால்மேனன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கலெக்டரின் தந்தை வரதாஸ் தினபூமி நிருபரிடம் கூறியதாவது:-

சட்டீஸ்கரில் என் மகன் அங்குள்ள மக்களிடையே நட்புறவு கொண்டு கலெக்டராக பணிபுரிந்து வந்தவர். திடீரென தீவிரவாதிகளால் அவர் கடத்தப்பட்டு இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் மன வேதனையில் இருந்து வருகிறேன். என் மகன் அலெக்ஸ் பால்மேனனுக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது. அவரது மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். என் மகனுக்கு வீசிங் பிரச்சனை உள்ளது. அதற்காக அவர் மருந்து உட்கொண்டு வருகிறார். கடத்தப்பட்ட நாள்முதல் அவர் மருந்து சாப்பிட்டாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. நானும் உடல் நிலை சரியில்லாமல் உள்ளேன். 

ஆனாலும் என் மகன் தைரியமானவன். என் மகனை பற்றிய தகவல் இதுவரையில் எனக்கு தெரியவில்லை. மத்திய அரசு சார்பிலோ மாநில அரசு சார்பிலோ என் மகன் பற்றிய தகவல் இதுநாள் வரை எனக்கு தெரியப்படுத்தவில்லை. 

பேப்பரில் வரும் செய்திகளை பார்த்தும், டி.வி.யில் வரும் செய்திகளை மட்டுமே பார்த்து வருகிறோம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுடன் பேசி ஒரு நல்ல முடிவெடுத்து என் மகனை மீட்டுத்தருவார்கள். என்ற நம்பிக்கையில் உள்ளோம். என் மகனுடன் பிறந்த சகோதரி ஜூலியட்ரூபா மைசூரில் டாக்டராக பணி புரிந்து கொண்டு அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார். அவள் அடிக்கடி போன் செய்து என் மகனை பற்றி கேட்டுகொண்டே இருக்கிறாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல், நானும், என் மகளுக்கு தைரியம் சொல்லி வருகிறேன். தீவிரவாதிகள் என் மகனை ஒன்றும் செய்யக்கூடாது என்று கடவுளை வேண்டி வருகிறேன் என மன வேதனையில் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்