முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் 8 தமிழ் கலெக்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், ஏப். 25  - கடத்தப்பட்ட அலெக்ஸ்பால் மேனனையும் சேர்த்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 8 தமிழ் கலெக்டர்கள் உள்ளனர். இவர்கள் தவிர மேலும் 15 தமிழக அதிகாரிகளும் முக்கிய உயர் பதவிகளில் உள்ளனர். அலெக்ஸ் கடத்தலை தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் அத்தனை கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் முக்கிய பதவிகளில் உள்ளனர். அலெக்ஸ் கடத்தலை தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் அத்தனை கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம். 

சத்தீஸ்கரில் மொத்தம் 27 மாவட்டங்கள் உள்ளன. இதில் 8 மாவட்டங்களில் கலெக்டர்களாக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் அலெக்சும் ஒருவர். மேலும் அம்மாநில கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆவார். இது தவிர பாரதிதாசன், பிரசன்னா, சி.ஆர். பிரசன்னா, அன்பழகன், அலர்மேல்மங்கை, பிரகாஷ், ரஜத்குமார் ஆகியோர் அம்மாநிலத்தில் கலெக்டர்களாக உள்ளனர். அன்பழகனும், அலர்மேல்மங்கையும் கணவன், மனைவி ஆவார்கள். 

இவர்கள் தவிர கோர்பா மாவட்ட எஸ்.பி.யாக தமிழகத்தின் சுந்தர்ராஜ் இருக்கிறார். இவர் தவிர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சங்கீதா, பி. சங்கீதா, தேவசேனாபதியும், அருண் பிரசாத், வெங்கடாசலம், மாதேஸ்வரன் ஆகியோர் வன அதிகாரிகளாகவும் உள்ளனர். அன்பழகன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது மனைவி அலர்மேல்மங்கை கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். அலெக்ஸ் கடத்தலை தொடர்ந்து அங்கு அசாதாரண நிலை நிலவி வருவதால் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago