முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்ஹாக் கமிட்டி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.25 - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அட்ஹாக் கமிட்டி தலைவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் 30-லிருந்து 40 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பொதுக்குழுவை கூட்டி 10-லிருந்து 30 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தி தருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் சிலரின் தூண்டுதல் காரணமாக பெப்சி தொழிலாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக போராட்டங்களை தொடங்கினர். 

தயாரிப்பாளர் சங்கத்தை உடைப்பதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டனர். இதையடுத்து அட்ஹாக் கமிட்டியை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் அட்ஹாக் கமிட்டியின் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்கின்றனர். சங்க ஊழியர்களையும் மிரட்டி வருகின்றனர். அட்ஹாக் கமிட்டியின் நடவடிக்கையில் சந்திரசேகரன், தாணு, தேனப்பன் ஆகியோர் குறுக்கிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு இப்ராகிம் ராவுத்தர் மனுவில் கூறி உள்ளார். 

இந்த மனு 18 வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ம் தேதி சந்திரசேகரன், தாணு, தேனப்பன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்