முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் மீது அதிமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.75 கோடி கொடுத்து தன் மீதான நிலமோசடி புகாரை வாபஸ் பெறச் செய்தார் என அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.  தமிழக சட்டப் பேரவையில் நேற்று 24.4.12 நடத்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாகத்தில் அதிமுக உறுப்பினர் பேசியதாவது:- நேற்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசியதாவது:-

முதல்வர் பேரவைத் தலைவர் கடந்த குடும்ப ஆட்சியில் மதுரைக்கு ஒரு மாயாண்டி சென்னைக்கு ஒரு வீணாண்டி டெல்லிக்கு ஒரு பேராண்டி மற்றும் மகள் என்று சொந்த பந்த சுற்றும் சூடி பல லட்சம் கோடிகளை சூறையாடிய, ஒரு சூழல் நிதியின் சூழ்ச்சியில் சக்கி, சின்னா பின்னமாகிய இந்த தமிழகத்தை மக்களின் பேராதரவுடன் மீட்டெடுத்த வெற்றி வீராங்கனை நம் முதல்வர் ஜெயலலிதா.

சட்டம் ஒழுங்கு என்பதை நிலைநாட்ட, காவல் துறைக்கு முழுசுதந்திரம் கொடுத்திருக்க வேண்டும். அப்போது தான் தொழில் முறை ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து தாதாக்கள், கொள்ளை அடிப்பவர்கள், பிக்பாக்கெட்டுகள்  ஆகியோரை கட்டுபடுத்தி, ஒதுக்கி, குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் நாட்டை பாதுகாக்க முடியும்.

ஆனால், கடந்த ஆட்சியில் தொழில் சார்ந்த ரவுடிகள், தாதாக்கள், கொள்ளையர்கள் என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு, ஆட்சியாளர்களுடன் ஒன்றிப்போய் இருந்தார்கள். கடந்த ஆட்சியில் நடந்த ஏராளமான தவறுகளுக்கும் கொலை மற்றும் நில ஆக்கிரமிப்புகளுக்கும் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களும் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களும் மற்றும் கட்சி பொறுப்பில் இருந்தவர்களும் நேரடியாக களத்தில் குதித்து, நிஜ ரவுடிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் சவால் விடும் வகையில் செயல்பட்டார்கள் என்று சொன்னால். அது மிகை ஆகாது.

முதல்வர் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. சென்னை தீவுத்திடல் அருகே குடிசைப் பகுதியில் வசித்து வந்த தில்சன் என்ற சிறுவன் ராணுவக் குடியிருப்புக்குள், பாதாம் கொட்டையை பறிக்கசென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டான். இக்கொலையை செய்தவர் இராணுவத்தின் முன்னாள் அதிகாரி 

இக்கொலையில் எந்தவித துப்பும் இல்லாமல் போலீஸ் அதிகாரிகள் சிறந்த முறையில் விசாரனை நடத்தி அந்த குற்றவாளிகளை கைது செய்தார்கள். அவருக்கு இப்பொழுது ஆயுள் தண்டனை கிடத்து இருக்கிறது. இது ஏழைக்கும் சம நீதி வழங்கிய சட்டத்தின் ஆட்சி.

வட மாநிலத்தில் இருந்து வந்து, வங்கிகளை கொள்ளையடித்த கும்பலை, வேர் அருத்ததின் மூலம் தமிழ்நாட்டில் குற்றம் புரிய நினைக்கும் குற்றவாளிகளை குலை நடுங்க செய்திருக்கிறது.

திருப்பூர் ஜாய் ஆலூக்காஸ் நகைக்கடையில், கொள்ளை அடித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த கொள்ளையர்களை வெகு விரைவாகப் புலனாய்வு செய்து, மேற்கு வங்கத்திற்கே சென்று கொள்ளையர்களை கண்டு படித்து கைது செய்தனர்.

தமிழகத்தில் தீவிர வாதிகளோ, நச்சலைட்டுகளோ கால் எடுத்து வைக்கவே, அஞ்சும் அளவிற்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது.

நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்கு என்றே தனிப்பிரிவை ஏற்படுத்தினார் முதல்வர். இந்த உத்தரவால் ஏகப்பட்ட ஏழைகள் தங்கள் நிலங்களை திரும்பப்பெற முடிந்தது.  

முதல்வர் தலைமையின் கீழ் செயல்படும் காவல் துறை அனைத்து வகையிலும், செயல்களில் திறந்து குற்றங்களை ஆய்ந்து தனது கடமையை சிறப்புறசெயல் ஆற்றுகிறது. அதை யாரும் குறைவாக எடைப்போடக் கூடாது.

கடந்த கால மைனாரிட்டி ஆட்சியில் போலீஸ் நிலையங்களை, திமுக கரை வேட்டிகளே ஆக்கிரமித்து கட்டப்பஞ்சாயத்துகளை செய்துக் கொண்டிருந்தன.

மேலும், காவல் துறையை அதன் பணியை செய்ய விடாமல் சம்பந்த மில்லாத பணிகளை செய்ய வைத்து ஆட்சியாளர்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். 

2001 -ம் ஆண்டு முதல் 2006 -ம் ஆண்டு வரை நடந்த முதல்வர் ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. மின்துறை பொன் துறையாக இருந்தது. நிதிநிர்வாகத்துறை சிறப்பாக இருந்தது. உள்ளாட்சித்துறையில் நல்லாட்சி இருந்தது. சுகாதாரத்துறை சுத்தமாக இருந்தது. போக்குவரத்து துறை சீராக இருந்தது. வருவாய்த்துறை பொறுப்பாய் நடந்துக் கொண்டது. பொதுப்பணித்துறை பொலிவோடு இருந்தது.

காவல் துறை கண்ணியத்தோடும், கம்பீரத்தோடும் செயல்பட்டது. இப்படி இருந்த துறைகளை 2006 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக நலிவடையச் செய்து அனைத்துத் துறைகளையும் சீர்குலைத்து விட்டது. 

சென்னை திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் திமுக அமைச்சர் கே.பி.சாமியும், அவரது தம்பிகளும் செய்த அராஜகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அங்கே அந்த பகுதியில், எத்தனை கொலைகள் நடந்தன. எத்தனை மீனவர்களை குடும்பத்தோடு அடித்து விரட்டினார்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுத்ததா? இல்லையே.

போலீஸ் நடவடிக்கை எடுக்க வில்லை என்று பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்றம் அந்த அமைச்சருக்கும், அமைச்சரின் தம்பிக்கும், கடும் கண்டனம் தெரிவித்தப் பிறகும் இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தார்களா? இல்லையே.

அதே புகார்களை தற்போது முதல்வர் ஆட்சியில் பொதுமக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கே.பி.பி.சாமி சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் கிராமத்தில், 24.4.2009 அன்று இரட்டை கொலை நடந்தது. ரியல் எஸ்டேட் விவகாரத்தில் நடந்த மோதலில் அந்த வீட்டில் இருந்த வயதான தம்பியினர் சுட்டு கொலை செய்யப்பட்டார்கள். திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இநத சம்பவத்தில் அப்போதைய சபாநாயகரின் மகனும் முன்னாள் செய்தி துறை அமைச்சரின் சகோதரரும் தொடர்புடையவர்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் அப்போது வெளியானது. இந்த வழக்கில் விசாரனைக்கு அழைத்து வரப்பட்டவரையும், காவல் நிலையத்திலேயே அடித்து கொன்று விட்டார்கள். இந்த வழக்கில் திமுக ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன், 2010 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ம் தேதி நீச்சல் பயிற்சிக்காக செனாய் நகருக்கு, மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவி செய்த வேகத்திலேயே வழக்கிற்கு மூடு விழா நடத்திவிட்டார்கள்.

அடுத்ததாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வன் வெட்டிபடு கொலை செய்யப்பட்டார். ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளருக்கே இவர்களின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

சென்னையில் உள்ள கே.கே.நகர் பகுதி திமுக மகளிர் அணியை சேர்ந்த பால்மலர் என்பவர் திமுக ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் காவல் துறையில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

முதல்வர் ஜெயலலிதா ஆட்சி ஏற்பட்டபிறகு தான் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

முன்னாள் முதல்வரின் பேரனுக்கு சொந்தமான மதுரையில் உள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம், அடித்து நொறுக்கப்பட்டு வெடிகுண்டு வீசி தீவைத்து எரிக்கப்பட்டது. பத்திரிக்கை ஊழியர்கள் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் முன்னாள் முதல்வரின் மகனும் அவரது அடி ஆட்களும் ஆகும்.

ஈரோட்டில் சிவபாலன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தது மட்டும் இல்லாமல் அவரை கடத்தி, அடித்து, மிரட்டி சித்திரவதை செய்தவர் அப்போது அமைச்சராகவும், திமுக மாவட்ட செயலாளராக இருந்த என்.கே.பி.ராஜா பாதிக்கப்பட்ட சிவபாலன் காவல் துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. 

திருச்சியில் துரைராஜ் மற்றும் அவரது கார் டிரைவரை உயிரோடு காரிலேயே வைத்து எரித்துக் கொன்றார்கள். அடுத்த நாளே துரைராஜின்  சகோதரரும் படுகொலை செய்யப்பட்டார்.  மேலும் இந்த கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயமும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்த வழக்கில் தி.மு.க. ஆட்சியாளர்கள் நியாயமாக நடவடிக்கை எடுத்தார்கள்?

2010-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நெல்லையில் நடந்த அரசு விழாவில் கலந்துக் கொள்ள சென்ற முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மைதீன்கான் ஆகியோரின் கண் எதிரிலேயே அரிவாளால் வெட்டப்பட்டு, வெடிகுண்டு வீசி வெற்றிவேல் என்கின்ற காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை செய்யப்பட்டார். அமைச்சர்கள் இருவரும் நடந்த சம்பவத்தை வேடிக்கைப் பார்த்தார்களே தவிர, கொலையாளிகளை பிடிக்கவில்லை. மக்களின் உயிர் காக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சரே நடந்த சம்பவத்தை வேடிக்கைப் பார்த்ததோடு மட்டும் அல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டி இருந்து சப்-இன்ஸ்பெக்டரை, காப்பாற்றி மருத்துவமனைக்கு கூட உடனடியாக அனுப்பாமல் நின்றுக் கொண்டு இருந்த காட்சி பத்திரிக்கைகளிலும், டி.வி.களிலும் வெளிவந்தது.

சிவகாசியை சேர்ந்த தபால் துறை ஊழியர் லட்சுமணன் என்பவரை அருப்புக்கோடை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல் அமீது படுகொலை செய்தார். அப்போது தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனின் உத்தரவின் பெயரில், சாகுல்அமீது மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. தற்போது தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் விசாரணை வேகம் எடுத்து, குற்றவாளியும் அவருக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள்.

தி.மு.க. ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் மீதே நில அபகரிப்பு புகார் கொடுக்கப் படுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் தற்போது ஸ்டாலின் வசிக்கும் வீடே நில அபகரிப்பு மூலமாக வந்தது தானே.

இந்த வீட்டின் முந்தைய உரிமையாளர் சேஷத்திரிகுமார் 4 மாதங்களுக்கு முன்பாக புகார் கொடுக்கிறார். எனது நிலத்தை மோசடி செய்துவிட்டதாக வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ராஜா சங்கர், சுபாரெட்டி ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் எப்.ஐ.ஆர். போட்டதும், ஸ்டாலின் என்ன செய்தார்.

டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு சென்றார். என்னை கைது செய்யுங்கள் என்னை கைது செய்யுங்கள் என்று கூப்பாடுப் போட்டார்.

எப்.ஐ.ஆர். போட்டது சென்னை மாநகர போலீசார். இவர் போனதோ டி.ஜி.பி. அலுவலகத்திற்கு. ஒரு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வராக இருந்தவருக்கு எந்த இடத்திற்கு செல்வது என்று  கூடத் தெரியவில்லை.

புகார் கொடுத்தவரோடு மீண்டும் ஒரு ஒப்பந்தம் போட்டு 1.75 கோடி ரூபாய் கொடுத்து வழக்கை வாபஸ் வாங்குகிறார் ஸ்டாலின்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் ரத்து செய்யப்படுகிறது. வழக்கைப் பொறுத்தவரையில் சேஷாத்திரிகுமார் கொடுத்த புகார் பொய்யானது என்றோ.. ஸ்டாலின் உள்ளிட்டோர் நிரபராதிகள் என்றோ... இந்த வழக்கை நீதிபதி ரத்து செய்ய வில்லை.

1.75 கோடி ரூபாய் கொடுத்து புகாரை வாபஸ் வாங்க வைத்ததற்கு என்ன பெயர். இந்த வழக்கில் ஸ்டாலின் குற்றவாளியா.. இல்லையா.... என்பதை இந்த பேரவையில் சொல்ல முடியுமா?

இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் அது சரியில்லை.. இது சரியில்லை... என்று ஒரு அணியின் தலைவர் ஊர் ஊராக வசனம் பேசிக்கொண்டு திரிகிறார். மேக்கப் போட்டு கொண்டு வசனம் பேசி வந்தாலும் பரவாயில்லை. மேக்கப் போடாமல் வசனம் பேசி வருவதால், மக்கள் ஒரு பீதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு விஞ்ஞானி நாங்கள் கூட்டணி சேராவிட்டால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து இருக்காது என்று ஊர் ஊராகச் சென்று உளறி, மனு வாங்கிக் கொண்டு அலைகிறார்.

சமீப காலமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக ஒரு சிலர் கூப்பாடு போட்டுக் கொண்டு அலைகிறார்கள். நடந்த குற்றங்களும், கொள்ளைகளும் கடந்த 5 ஆண்டு கால கருப்பு ஆட்சியில் ஆட்சியாளர்களோடு கை கோர்த்து ஆட்டம் போட்ட சமூக விரோதிகளால் புரையோடிய புண்ணாகி போன சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா ஆட்சி அமைந்த இந்த 10 மாத காலத்தில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார்கள். குற்றவாளிகள் முற்றிலும் களையெடுக்கப் படுவார்கள் தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாக விரைவில் திகழும்.

எதிரிகளை நார் நாரா கிழிக்கிற அதே கூர்மையான பல்லுதான் குட்டிகளையும் கல்வி எடுக்குது.

தமிழகத்துல மட்டுமில்ல ஒலகத்துல எந்த மூலையில தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் அவுங்களுக்காக ஒலிக்கிற முதல் குரல் ஜெயலலிதாவுடைய குரல் தான்!

இவ்வாறு வெற்றிவேல் எம்.எல்.ஏ. பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்