முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலையாளிகள் மூவர் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, ஏப்.25 - பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய கோரும் வழக்கினை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரும் மனு மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதை தொடர்ந்து, இந்த மூவருக்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் தங்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்திமன்றம், மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.மேலும், இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் விசாரணையை தள்ளி வைத்துள்ளது. இதற்கிடையே, இந்த மனுக்களின் விசாரணையை வேறு மாநில உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென கோரி, மூப்பனார் பேரவை தலைவர் எல்.கே.வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தூக்கு தண்டனை கைதிகளுக்கு பல்வேறு கட்சிகளும், தமிழக அரசும் ஆதரவு அளிக்கின்றன. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை நடக்காது என்பதால், வேறு மாநில உயர் நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று விசாரணையை முடித்த நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்