முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுப்பணித் துறையில் 160 பேருக்கு பணிநியமன ஆணை

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.26 -  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையில் பணிக் காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும், பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பொறியாளர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 45 வாகனங்களையும் வழங்கினார். பொதுப்பணித் துறையில் பணிக் காலத்தில் இயற்கை எய்திய 160  பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை 50 பேருக்கும், தட்டச்சர் பணிக்கான பணி நியமன ஆணை 8 பேருக்கும், ஓட்டுநர் பணிக்கான பணி நியமன ஆணை 7 பேருக்கும், பதிவுரு எழுத்தர் பணிக்கான பணி நியமன ஆணை 22 பேருக்கும், காவலாளர் பணிக்கான பணி நியமன ஆணை 11 பேருக்கும், உதவி வரைவாளர் பணிக்கான பணி நியமன ஆணை 20 பேருக்கும், பாசன உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை 26 பேருக்கும், தோட்டக்காரர் பணிக்கான பணி நியமன ஆணை 8 பேருக்கும், துப்புரவு பணியாளர் பணிக்கான பணி நியமன ஆணை 7 பேருக்கும் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை 1 நபருக்கும், என மொத்தம் 160 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று வழங்கி வாழ்த்தினார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்ட வாரிசுதாரர்கள், கருணை அடிப்படையிலான பணி வழங்கி தங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த  தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். 

மேலும், பொதுப்பணித் துறை கட்டட அமைப்பைச் சார்ந்த மாவட்ட தலைமையகங்களில் இயங்கி வரும் உப கோட்டங்களில் உள்ள உதவிச் செயற்பொறியாளர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 31 ஜீப்புகள், nullநீர்வள ஆதாரத் துறையின் செயற் பொறியாளர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 10 ஜீப்புகள்,  தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 4 சீருந்துகள் என மொத்தம் 45 வாகனங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,  பொதுப்பணித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago