முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், 104 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள பதினாறு புதிய துணை மின் நிலையங்களையும், நான்கு தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களையும் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் 6 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; காஞ்சிபுரம் மாவட்டம் ராஜகீழ்பாக்கத்தில் 7 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம், கோவிலம்பாக்கத்தில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம், அடையாளச்சேரியில் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; ஈரோடு மாவட்டம் நல்லகவுண்டம்பாளையத்தில் 6 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம், ஊராட்சிகோட்டையில் 7 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம்; தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 11 கோடியே 39 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 6 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம், தே. குன்னத்தூரில் 1 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையத்தில் 7 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம்; கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் 98 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; திருச்சி மாவட்டம் வாளாடியில் 3 கோடியே 58 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் 1 கோடியே 27 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம்; கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் 3 கோடியே 31 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கி.வோ. துணை மின்நிலையம் ஆகிய 16 புதிய துணை மின் நிலையங்களையும், தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவிலில் 3 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம், திருக்கானூர்பட்டியில் 5 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; கரூர் மாவட்டம் மாயனூரில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின்நிலையம்; சிவகங்கை மாவட்டம் கல்லலில் 4 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம் ஆகிய நான்கு தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள், என மொத்தம் 104 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான துணை மின் நிலையங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட இந்தப் புதிய துணை மின் நிலையங்கள் மூலம்,  அந்தந்த துணை மின் நிலையங்களைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களுக்கு,  மின் பாதை இழப்பை குறைத்து, சீரான மின்சாரம் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில்,  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்