முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி ஏப் - 26 - போர்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம் என்று ஆண்டிபட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் தா. பாண்டியன் பேசினார். தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட பொருளாளர் எஸ். கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெ. தங்கம் முன்னிலை வகித்தார். முாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சி.பி.ஐ. மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசியதாவது - ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம்பட்டியில் கடந்த 7,8 ஆண்டுகளாக ஏழை விவசாய கூலிகள் இலவச வீட்டுமனைபட்டா கேட்டு போராடி வருகிறார்கள். நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபிறகும் அதிகாரிகள் இழுத்தடிப்பது நியாயமல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கான வீட்டு மனைபட்டாவை பெற்றேதீரும். அதிகாரிகள் அந்த 100 விவசாய கூலிகளுக்கு பட்டா வழங்கியே தீரவேண்டும். விலகி நீன்றால் கண்துடைப்பு என்று கருதவேண்டிவரும். மேலும் அவர் இந்தியாவில் புழங்கும் பணம் கொங்சம் நஞ்சமல்ல தொழிற்சாலைகளில் 100 கோடி லாபம், வங்கிகளில் பலகோடி லாபம், நெய்வேலியில் லாபம், நிலக்கரி சுரங்கத்தில் லாபம், ரயில்வே துறையில் பலகோடி லாபம் என்கிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி பேரில் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் பலகோடிபேர் உள்ளனர். பட்டினி கிடப்போர் கோடிக்கணக்கில் உள்ளனர். இன்று கிரிக்கெட் விளையாடும் ஒருவருக்கு 3 கோடி முதல் 9 கோடி வரை சம்பளம் தருகிறார்கள். அதைபடம் பிடித்து காட்டும் சோனிகம்பெனிக்கு 2500 கோடி லாபம். ஆனால் கங்கை கரையிலும் கோதாவரிக்கரையிலும் கரும்பு, வாழை, நெல் பயிரிட்டு கஷ்டப்பட்டு நமக்கு உணவுதரும் விவசாயிக்கோ 2 கோடிகடன் என்று சொல்கிறார்கள். மக்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும். மக்கள் இருக்கிறவரை தான் கட்சிகள். கட்சிகள் மக்களை உயிரோடும், மானத்தோடும், நிம்மதியோடும் வாழ செய்யவேண்டும். சமீபத்தில் இந்திய அரசு விஞ்ஞான ரீதியாக கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகனை பறக்கவிட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். வளர்ந்து வரும் விஞ்ஞானம் மக்களுக்காக என்ன செய்தது. குடிசையை மாற்றி வீடுகட்டி கொடுத்ததா? தண்ணீர் கொடுத்ததா? படிப்பு கொடுத்ததா? மக்களுக்கு பயன்தராத விஞ்ஞான வளர்ச்சி தேவைதானா? என்று கேள்வி எழுப்பினார். நாட்டில் இன்னொரு மோசமான சூழல் தற்போது கலெக்டரையும், எம்.எல்.ஏவையும் கடத்துகிறார்கள். காப்பாற்ற வந்த இருவரையும் சுட்டு கொள்கிறார்கள். நடந்தது என்ன, ஆசிவாசிகளுக்கு என்ன தெரியும் அவர்கள் குறைதீர்க்கப்பட்டதா? போஸ்கோவின் விருந்துக்கு செல்கிறவர்கள் சிந்திக்கவேண்டாமா? நல்ல காரியம் செய்யப்போய் கெட்டபெயரை உண்டாக்கிவிடுகிறது. தமிழ்நாட்டோடு பீகாரை ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். தமிழ்நாடு மின்வெட்டுக்குபிறகும் ஜொலிக்கிறது. பீகாரிலோ பசிபஞ்சம், பட்டினி, இன்னும் சைக்கிள்ரிக்சாவும், எண்ணெய் தேய்க்காததலையும், சோளாமாவும், மிளகாயும் தின்று உயிர் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 10 கோடி. பீகாரின் வருமானம் வெறும் 600 கோடி பீகாரில் தான் கங்கை ஓடுகிறது. மாநிலங்களுக்கிடையே வித்தியாசம் 6 மாநிலங்கள் நன்றாக உள்ளது. 24 மாநிலங்கள் தரித்திரத்தில் உள்ளது. 6 மாநிலங்களிலும் 6 மாவட்டங்கள் தான் நன்றாக உள்ளது. நமது இந்தியர்களின் பணம் வெளிநாட்டில் 25 வங்கிகளில் 120 லட்சம் கோடி பதுக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடி வருமானம் வரும் தமிழ்நாட்டிலே மிக்ஸி இலவசம், படிப்பு இலவசம், கரண்ட் இலவசம் எல்லாமே இலவசம் எனத்தரும்போது 120 லட்சம் கோடி வெறுமனே வெளிநாடுகளில் கிடக்கிறது. அதை திரும்ப பெற்றால் என்ன என கேட்டால் சட்ட சிக்கல் என்கிறார்கள்.

மேலும் அவர் பேசியது கெட்ட பின்பு ஞானி என்பார்கள் கலைஞர் இப்போது சொல்கிறார் தனித்தமிழ் ்ழம் வேண்டும் என்று 10 வருடம் கழித்துசொல்ல கூடாது. இலங்கையில் எங்கள் ரத்தம் மடியக்கூடாது என்று பல ஆண்டுகளாக குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ராணுவத்தையும் அனுப்பி தளவாடங்களையும் அனுப்பி எங்கள் சொந்தங்களை கொன்று குவித்தபின் இன்று துாதுக்குழு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? முள்வேலியில் முடங்கிகிடக்கும் ்ழத்தமிழர்கள் முதலில் வெளியேற்றி குடியமர்த்து அதற்குப்பின் வருகிறோம் என்றல்லவா? இந்த காங்கிரஸ் சொல்லியிருக்கவேண்டும். கேபினட் அந்தஸ்தில் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் திமுகவிற்கு இது தெரியவில்லை. இன்று வீடு கட்டி கொடுக்கிறார்களாம். ஏற்கனவே இருந்த தமிழர்களின் வீடுகள் எங்கே? போர்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம். தமிழக அரசுக்கு வேண்டுகோள் பள்ளி, கல்லுாரிகள் தொடங்கும் நேரம் பள்ளி, கல்லுாரிகளுக்கான முறையான விதிமுறைகளின்படி அனுமதி வழங்கவேண்டும். முறையான கட்டண விபரங்களை டி.வி.யில் அறிவிப்பு செய்யவேண்டும். நிலத்திருடர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். மின்சாரத்தட்டுப்பாட்டை நீக்க இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பேசினார். முன்னதாக நடந்த மாவட்டகுழு கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.வி.கே. ஜீவா, மாவட்டதுணைச்செயலாளர் ரவிமுருகன், ஒன்றிய செயலாளர் பெருசு, ஒன்றிய துணைச்செயலாளர் ஞானம்மாள், வக்கீல் பாண்டியன், நிர்வாகிகள் மாரியம்மாள், தமிழ்செல்வன், சீனிமுத்து, ராமசாமி, சரவணன், மாரிமுத்து, சாலமன், பாலு, பிரவீந்திரன், அண்ணாமலை, எரோமியா, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago