முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்கள் 8 பேருக்கு தூக்கு தண்டனை ரத்து

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

துபாய்,மார்ச்.29 - கொலை வழக்கில் இந்தியர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை சார்ஜா கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி துபாயில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் தொழில் போட்டியின் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் இந்த 10 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கி சார்ஜா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதில் இந்தியர்கள் 8 பேர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க தூக்குத்தண்டனை பெற்ற பாகிஸ்தானியர் 2 பேர் ஒப்புக்கொண்டனர். அதனையடுத்து அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் துபாயில் உள்ள ஒரு ஓட்டல் அதிபர் ஒபராய் சிங் என்பவர் தூக்குத்தண்டனை பெற்ற அந்த 8 பேர் சார்பாக நஷ்ட ஈடுகொடுக்க முன்வந்தார். இதனையொட்டி அந்த 8 பேருக்கும் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அந்த 10 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் மட்டும் கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 21 மாதங்கள் அவர்கள் சிறையில் இருந்துவிட்டனர். மீதிக்காலம் முடிந்த பின்னர் அந்த 10 பேரும் விடுதலை செய்யப்பட்டு நேரடியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்