முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் மனித குண்டு வெடித்து 13 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

ஷரான், மார்ச் 29 - ஆப்கானிஸ்தானில் வெடி குண்டுகள் நிரப்பிய லாரி ஒன்றை தீவிரவாதி ஒருவன் ஒரு கட்டிடத்தின் மோதி வெடிக்கச் செய்தான். இதில் 13 பேர் உடல் சிதறி பலியானார்கள். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கும் தலிபான் தீவிரவாதிகள்தான் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் தற்கொலைப் படை தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். காபூல் உள்ளிட்ட பல நகரங்களில் இவர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதுவரை இந்த தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தானில் உள்ள தலிபான் முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தான் மாகாணமான படிகா மாகாணத்தில் நேற்று தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினான். படிகா நகரில் உள்ள கட்டுமான கம்பெனி ஒன்றின் கட்டிடத்தின் மீது வெடிகுண்டுகல் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதச் செய்து வெடிக்கச் செய்தான். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் என்ஜினீயர்கள், தொழிலாளர்களும் அடங்குவர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்