முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண் கைது

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, மே.13 - தமிழக முதல்வரின் வீடு மற்றும் மதுரை மீனாட்சி கோயில், ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீவில்லி. தனியார் பல்கலைக் கழக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். தமிழக முதல்வரின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லி ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ஸ்ரீவில்லி அருகே உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் இருந்துதான் இந்த மிரட்டல் விடப்பட்டது தெரியவந்தது. 

உடனடியாக ஸ்ரீவில்லி டி.எஸ்.பி. சக்திவேல் பல்கலைக் கழகத்திற்கு சென்று அங்கு இயங்கி கொண்டிருந்த 17 கம்ப்யூட்டர்களை சோதனை செய்த போது அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டர் மூலம்தான் நாச்சிமுத்து என்ற முகமதுகான் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது தெரியவந்தது. அந்த கம்ப்யூட்டர் அங்கு கணக்கராக பணிபுரம் ராமசந்திரபுரத்தை சேர்ந்த வசந்தா(28) என்பவர்தான் அதை பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது. வசந்தாவை விசாரிக்கும் போது அவர் தனக்கும், தனது கணவர் நாச்சிமுத்துவுக்கும் கடந்த 2010 ல் திருமணமானது என்றும், மும்பை சென்ற தனது கணவருக்கும், தனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறினார். 

மேலும் கடந்த 2011 ல் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்றும், அதனை கணவர் நாச்சிமுத்து வந்து பார்க்கவில்லை என்றும், குடும்ப செலவுக்கு பணமும் தரவில்லை என்றும் கூறிய அவர், கணவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக தான் பணிபுரியும் பல்கலைக் கழகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மூலமாக நாச்சிமுத்து, முகமதுகான் என்ற பெயரில் மிரட்டல் விடுத்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் புகாரின் பேரில் வசந்தா மீது ஒரு வழக்கும், சென்னை சைபர் கிரைம் மூலம் ஒரு வழக்கும் வசந்தா மீது பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து ஸ்ரீவில்லி நீதிமன்ற நீதித்துறை நடுவர் எண் 2 ல் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி கவிதா, பல்கலைக் கழக ஊழியர் வசந்தாவை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்