முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளத்தை சுற்றி மேலும் 3 சோதனைச் சாவடிகள்

திங்கட்கிழமை, 14 மே 2012      தமிழகம்
Image Unavailable

நெல்லை, மே - 14 - கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி கூடுதலாக மேலும் 3 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. பாதுகாப்புக்காகவும் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுமின் நிலையத்திற்கான இறுதிப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது மாதிரி எரிபொருட்களை அகற்றும் பணி நடக்கிறது. யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்கு அணுசக்தி ஆணையம் அனுமதி வழங்கும் என்று நிலை வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்தார். இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதையொட்டி கூடங்குளம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அணு உலையை சுற்றி 7 கி.மீ. தூரத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த தூரம் அதிகரிக்கப்பட இருக்கிறது. கூடங்குளம் அணுஉலையின் பிரதான வாயிலிலும், புறவழிச் சாலையிலும் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக வைறாவிக்கிணறு, தாமஸ் மண்டபம் மற்றும் விஜயாபதி விலக்கு ஆகிய மூன்று இடங்களில் புதிதாக போலீஸ் சோதனைக் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக இடிந்தகரையில் நடக்கும் நான்காவது கட்ட காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 14 வது நாளாக நடக்கிறது. நேற்று உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட இயக்குனர் புகழேந்தி, தங்கராஜா, மகாராஷ்ட்ர மாநில விஞ்ஞானி விவேக் மந்தாரியா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரபிதரி இடிந்தகரை அருகே உள்ள சுனாமி காலனிக்கு வந்தார். இதனால் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்