முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திலிருந்து ரேசன்அரிசி கடத்தல் ஆந்திர அரசுபஸ் பறிமுதல்

திங்கட்கிழமை, 14 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே. - 14​- தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரிசி கடத்தலை தடுக்க சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அரசு பஸ்களில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்பவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்றில் பயணிகளுக்கு பதில் ரேஷன் அரிசி மூட்டைகள் மட்டும் ஏற்றப்பட்டு, சென்னையில் இருந்து கடத்திச்செல்லப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் சோதனை சாவடியில் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் நேற்று இரவு அதிரடி சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான எக்ஸ் பிரஸ் பஸ் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. பஸ்சினுள் அனைத்து விளக்குகளும் அனைக்ககப்பட்டிருந்தன. இன்ஸ்பெக்டர் உக்கிர பாண்டியன், சப்​ இன்ஸ்பெக்டர்கள் அண்ணாத்துரை, பாஸ்கர்தாஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது பஸ்சின் இருக்கைகள் அனைத்திலும் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 5 பெண்களும், ஒரு ஆண் மட்டுமே பஸ்சுக்குள் இருந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு பஸ்சை ஓட்டி வந்தார். இவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்த போலீசார் பஸ்சை அப்படியே திருப்பி, கொரட்டூர் பட்டரவாக்கத்தில் உள்ள சிவில் சப்ளை சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இவர்கள் அனைவரும் திட்டமிட்டு ரேஷன் அரிசியை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்த கும்மிடிப்nullண்டியை சேர்ந்த, திலகா, கோட்டீஸ்வரி, நெல்லூர் சூலூர்பேட்டை யைச்சேர்ந்த ராதா, தனம்மாள், குருவம்மாள் ஆகிய 5 பெண்கள் கைது செய்யப் பட்டனர். சூலூர் பேட்டை பெரிய nullண்டியை சேர்ந்த வேணு என்பவரும் போலீசில் சிக்கினார். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த டிரைவர் வெங்கடேஸ்வரலுவும் கைதானார். பஸ்சில் இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசார ணையில் செங்குன்றம் பகுதி ரேஷன் அரிசி கடத்தல் களமாக மாறி வருவது தெரிய வந்தது. ஆந்திர அரசு பஸ் டிரைவரான வெங்கடேஸ்வரலு, கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றாமல் காலி பஸ்சுடன் செங்குன்றம் வரை வந்துள்ளார். பின்னர் அங்கு வைத்து, இந்த அரிசி மூட்டைகளை ஏற்றி உள்ளனர். பின்னர் கடத்தல்காரர்கள் மட்டும் பஸ்சில் ஏறிக்கொள்ள ஆந்திரா நோக்கி பஸ் புறப்பட்டபோதுதான் போலீசார் மடக்கிப்பிடித்து அனைவரையும் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் கூடூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர்தான் கடத்தல் அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். அவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சிவில் சப்ளை கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறும்போது, கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago