முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் மீனவர்சாவு விரிவான விசாரணை தேவை

செவ்வாய்க்கிழமை, 15 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 15 - கடலோர காவல்படை கப்பல் மோதியதால் ராமேஸ்வர மீனவர் பலியானது குறித்து விரிவான விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். 110 விதியின் கீழ் சட்டசபையில்  அவர் வாசித்த அறிக்கையில் விவரம் வருமாறு:- மிகவும் பழமை வாய்ந்த தொழில்களில் ஒன்றான மீன்பிடித் தொழில் மூலம் உயர்தர புரதச் சத்துடன் கூடிய தரமான உணவுத் தேவையினை nullர்த்தி செய்வதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும் முக்கியப் பங்கினை தமிழக மீனவர்கள் வகிக்கிறார்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தொழிலை செய்யும் மீனவர்களின் நலன் காக்கும் வகையில், மீன்பிடி தடைக் காலத்தில் நிவாரணத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு  நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.  தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இந்நிகழ்வுகளை ஒரு தேசிய பிரச்சனையாக கருதி  பிரச்சனைக்கு தீர்வு காணவும் மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு கடிதம் மூலம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். இந்தச் சூழ்நிலையில், 10.5.2012 அன்று பாம்பன் கிராமத்தைச் சார்ந்த  5 மீனவர்கள் ஒரு நாட்டுப் படகில் ராமேஸ்வரம் அருகே அரியமான் கடற்கரையிலிருந்து நான்கு கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, இரவு  8.45 மணியளவில்  இந்திய கடலோர காவல் படையின் கப்பலொன்று மீன்பிடிப்பு மேற்கொண்டிருந்த இப்படகின் மீது மோதியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக மீன்பிடி படகு சேதமுற்று கடலில் மூழ்கியது. படகில் இருந்த 5 மீனவர்களில், நான்கு மீனவர்கள் சிறிது தொலைவு நீnullந்தி வேறு ஒரு வள்ளத்தில் ஏறி கரை சேர்ந்தனர்.  மற்ற ஒரு மீனவரான திரு பெளனிராஜ்  என்பவரின் மகன் கால்வின் மில்லர்  காயமுற்று nullநீரில் மூழ்கி  காணாமல் போய்விட்டார். 12.5.2012 அன்று காலையில் இந்த 19 வயது  இளைஞனின் உடல்   மண்டபத்திலிருந்து 7 கடல் மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், அகால மரணமடைந்த மீனவர் கால்வின் மில்லர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்ததுடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உடனடியாக அளித்திட உத்தரவிட்டுள்ளேன்.  எனது உத்தரவின்பேரில், தமிழக அரசின் தலைமைச்செயலாளர் அவர்கள் புது டில்லியில் உள்ள  இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநரை கடிதம் மூலம்  தொடர்பு கொண்டு  இவ்விபத்தின் உண்மை  நிலையினை அறிய விரிவான விசாரணை ஒன்று மேற்கொள்ள வேண்டுமென்றும் மீனவரின் இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.   மீனவர்களின் நலன் காப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் எனது தலைமையிலான அரசு, இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு நியாயம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்