முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் துவங்கியது.

செவ்வாய்க்கிழமை, 15 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

தேனி,மே.- 15 - தேனி மாவட்டத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் நேற்று துவங்கியது.இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் தேனி,திண்டுக்கல்,மதுரை,கோயம்புத்தூர்,நீலகிரி,ஈரோடு,திருப்பூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,நாமக்கல்,ஆகிய 11 மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.நேற்று நடைபெற்ற முகாமில் சிப்பாய் தொழில் பிரிவு மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.நேற்று 1,571 இளைஞர்கள் வருகை தந்தனர்.இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெறும் வளாகத்திற்கு தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி வருகை தந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது முகாமிற்கு வருகை தரும் இளைஞர்களுக்கு குடிநீர் வசதி,கழிவறை வசதி,முதலூதவி வசதி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.நேற்று சான்றிதழ் சரிப்பார்பு செய்யப்பட்டவர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது.இவற்றுடன் இன்றுநடைபெறும் முகாமில் தேனி,கோயம்புத்தூர்,கிருஷ்ணகிரி,ஈரோடு,சேலம்,நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு சோல்ஜர் ஜிடி பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago