முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு: சரத்குமார் எம்.எல்.ஏ. கண்டனம்

வியாழக்கிழமை, 24 மே 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மே.24 - மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்த்தியதற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இதன் மூலம் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.7.50 அளவிற்கு எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்த்தியிருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் பேரதிர்ச்சி அளிப்பதாக உள்ளது! பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்த மறுநாளே அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விலை உயர்வு, மக்களைப்பற்றி எந்த ஒரு கவலையும் கொள்ளாத மத்திய அரசின் மெத்தனப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவரும் மத்திய அரசின் பொருளாதார நிர்வாகத்தை எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில்,இந்த விலை உயர்வு அத்தகைய விமர்சனங்களை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

மத்தியில் ஒரு ஆட்சி இருப்பதாகத் தெரியவில்லை.நாடே பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் இன்று கருத்து தெரிவித்திருப்பதற்கேற்ப மத்திய அரசின் செயல்பாடுகள் மீது மக்களின் நம்பிக்கையின்மையை அதிகப்படுத்துவதாக இன்றைய பெட்ரோல் விலை உயர்வு அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

எனவே, வரலாறுகானாத அளவிற்கு பெட்ரோல் விலையை உயர்த்தியிருப்பதை சமத்துவ மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்