முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்றத்து முருகன் கோயிலில் இன்று வசந்த உற்சவம்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், மே. 25 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் திருக்கோயிலில் இன்று முதல் வரும் 2 ம் தேதி வரை வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வசந்த உற்சவம் நடைபெறும். முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வைகாசி விசாக பங்குனி திருவிழாவாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வைகாசி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த திருவிழா இன்று முதல் தொடங்குகிறது.
காலையில் உற்சவர் முருகப் பெருமான், தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெறும். வரும் 2 ம் தேதி வரை இரவு 7 மணிக்கு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து 3 ம் தேதி வைகாசி விசாகம் நடைபெறும். அன்றைய தினம் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். மதுரையை சுற்றியுள்ள பக்தர்கள் தலையில் சுமந்து பாதயாத்திரையாக கொண்டு வரும் பால், குடம் குடமாக சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பகல் 2 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். வரும் 4 ம் தேதி காலையில் முருகப் பெருமான், தெய்வானை அம்மனுக்கு சர்வ அலங்காரமாகி தங்க குதிரை வாகனத்தில் சட்டத் தேரில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருள்வர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து இரவு சுவாமி பூப்பல்லக்கில் கோயில் சேர்த்தி சென்றடைவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்