முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு 2 வாரத்தில் விடைத்தாள் நகல்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மே. 25​- பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு 2 வாரங்களில் விடைத்தாள் நகல்கள் அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு கடந்த ஆண்டு 86 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பத்திருந்தனர். இந்த ஆண்டு விண்ணப்ப விற்பனை தொடங்கிய முதல் நாளே ஆயிரக்கணக்கான பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி தமிழகம் முழுவதும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் அரசு தேர்வுகள் இயக்கத்துக்கு இம்மாதம் 27 ம் தேதியளவில் வந்து சேரும். அவை பரிசீலிக்கப்பட்டு மாணவருக்கு வழங்கப்பட்டுள்ள டம்மி கண்டறியப்பட்டு அவரின் விடைத்தாள் எந்த விடைத்தாள் திருத்தும் மையத்தில் உள்ளதோ அங்கிருந்து பெறப்படும். சென்னையில் சிறப்பு மையத்தில் வைத்து இந்த விடைத்தாள் நகல் எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மறுகூட்டல் மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒரு மாத காலத்தில் நிறைவடையும். அதன் பிறகு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அண்ணா பல்கலைக் கழகம் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு போன்றவற்றுக்கு கலந்தாய்வு தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும். மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இருந்தால் அதில் மாணவருக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைவாக பெற்றாலும் அந்த புதிய மதிப்பெண் சான்றிதழே இறுதியானது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago