முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மே.29 - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதுவை மாநில அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது. கண்மூடித்தனமாக பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ள மத்தியில் ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலையை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 29-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி புதுவை மாநில அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலும், அவைத்தலைவர் பாண்டுரங்கன், எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் மற்றும் காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் புதுவை தலைமை தபால் நிலையம் எதிரில் இன்று(29-ந் தேதி) காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

இதில் கட்சி நிர்வாகிகள் உமாபதி, அரசி, காசிநாதன், மணிமாறன், திருநாவுக்கரசு, பரசுராமன், பெருமாள், பாஸ்கரன், பன்னீர்செல்வி, வெங்கடாசாமி, கணேசன், பிஎல் கணேசன், அன்பானந்தம், விசிசி நாகராஜன், டாக்டர் நன்னன், தொகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago