முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் சோதனை குழாய் மூலம் 26 குழந்தைகள்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

ஈரோடு, மே. 29-  ஈரோடு பெருந்துறை  ரோட்டில் உள்ளதுபிரபல தனியார் மருத்துவ மனைசுதா டெஸ்ட் டியூப் பேபி சென்டர்.  இங்கு குழந்தை இல்லாத தம்பதியினருக்கு சோதனை குழாய் மூலம் குழந்தை பிறக்க சிகிச்சை  தரப்பட்டு  பல தம்பதியினருக்கு குழந்தைகள் பிறந்துள்ளது.  இந்த மருத்துவமனையில் கடந்த 2008 - ம் ஆண்டு சோதனை குழாய் மூலம் 20 குழந்தைகள் பிறந்தது.  தற்போது கடந்த புதன் (23-5-12 ) அன்று செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை அளிக்கப்பட்டு சோதனை குழாய் மூலம் ஓரே நாளில்  26 குழாந்தைகள் பிறந்துள்ளது.  ஈரோடு,திருச்சி,கோவை, பழனி, கடலூர் ,கிருஷ்னகிரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 19 பெண்களுக்கு ஆபரேசன் மூலம் இந்தகுழந்தைகள் பிறந்துள்ளது. இதில் 7 பேருக்கு இரட்டை குழந்தைகளும்,12 பேருக்கு தலா ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இது கூறித்து மருத்துவ மனையின் டாக்டர் தனபாக்கியம் கூறுகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ஓரே நாளில் 20 குழந்தைகள்சோதனை குழாய் மூலம் பிரசவித்து சுதா மருத்துவமனை சாதனை படைத்தது. தற்போது இந்த சாதனையைமுறியடிக்கும் விதத்தில் சோதனை குழாய் முறையில் ஓரே நாளில் 26 குழந்தைகள்பிறந்து உள்ளது. இது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த ஆபரேசன்கள் 3  ஆபரேசன்  அரங்கில் 3 மருத்துவர்கள்  டங்கிய குழு  மருத்துவர்கள் நான்,பிரதீபா,சுமதி ஆகியோர் அடங்கிய குழு செய்தது.  இவ்வாறு டாக்டர் தனபாக்கியம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்