முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முதல்வர் பிரதமராவார்: உதயகுமார் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், மே. 30 - விருதுநகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மக்களின் துயர் துடைப்பவர் ஜெயலலிதா என இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வைகைசெல்வன் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் வேலுநாச்சியார், ஜான்சிராணி ஜெயலலிதா என எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி மாநில செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசை கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் தபால்தந்தி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டின் பேரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிரணி இணை செயலாளர் சக்திகோதண்டம் வரவேற்றார். மாநில எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார். மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வைகை செல்வன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வைகை செல்வன் எம்.எல்.ஏ. பேசியதாவது, 

மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. அதனை தமிழக முதல்வர் எதிர்த்து அறிவாற்றலால் வெற்றி பெற்று வருகிறார். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தை மத்திய அரசு தராமல் புறக்கணித்து வருகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திலே இரண்டு புதிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைத்துள்ளார். ஏழை, எளிய மக்களின் துயர் துடைப்பவராக முதல்வர் விளங்கி வருகிறார். அதனால்தான் விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்சி போன்றவற்றை வழங்குகிறார் என்றார். 

ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், 

மக்கள் விரோத அரசாக இன்று மத்திய அரசு உள்ளது. மத்திய அரசின் 8 ஆண்டுகளில் 36 முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகளில் மட்டும் 17 முறை உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மதிப்பு மற்ற நாட்டு நாணயத்தை விட இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக உள்ளது என ஏமாற்றுகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து முதலில் குரல் கொடுத்தவர் தமிழக முதல்வர். மத்திய அரசுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் தென்னகத்தின் வேலு நாச்சியார், ஜான்ஸிராணி தமிழக முதல்வர். 

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மாநில அரசை வரியை குறைக்க கூறுகிறது. அதற்கு கஜானா காலி செய்யும் கருணாநிதி ஒத்து ஊதுகிறார். கருணாநிதி எத்தனை முறை வரியை குறைத்தார்.

தமிழகத்தை ஒன்றே கால் கோடி கடனாக்கி சென்ற கருணாநிதி ஒத்து ஊதவே பிறந்தவர். கருணாநிதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். திருட்டையே தொழிலாக கொண்டவர் திருட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த கதையாக உள்ளது. ஆனால் தமிழக முதல்வர் தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். ஓராண்டில் நூற்றாண்டு சாதனையை நிறைவேற்றியுள்ளார். மிக விரைவில் இந்திய திருநாட்டை தலைநிமிர்த்த தமிழக முதல்வர் பிரதமராவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago