முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,  மே.30 - வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிற்கிணங்க தமிழகமெங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் பங்கேற்று மத்திய அரசைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் புதுச்சேரி, ஆந்திரா, மகாராஷட்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் விலையை வரலாறு காணாத வகையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50 காசு என்ற அளவில் விலையை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த பெட்ரோல் விலையை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 52 மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா, மகாராஷட்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இதற்கிணங்க இன்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

தென்சென்னை (தெற்கு)

தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜி.செந்தமிழன் ஏற்பாட்டில் கே.கே.நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.

அதிமுக மருத்துவ அணி தலைவர் டாக்டர் மைத்ரேயன் எம்பி அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், ஜி.செந்தமிழன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜலட்சுமி எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் என்.எஸ்.மோகன், விருகை ரவி, ஜெயசந்திரன், சுந்தர்ராஜன், மனோகர், மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ.பழனி, கவுன்சிலர் நூர்ஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

வாரிய தலைவர் சி.ஆர்.சரஸ்வதி, திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், நடிகர் ஆனந்தராஜ், திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அண்ணாமலை, தி.நகர். கோ.சாமிநாதன், ஜெ.ஞானமுத்து, மயிலை ராஜேஷ் கண்ணா, கவுன்சிலர் சுப்பிரமணி, நம்பிராஜ், எம்ஜிஆர் நகர் அன்பு உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகளும், ஏராளமான மகளிரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய அரசையும்,  திமுகவையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கண்டன அட்டைகளையும், அதிமுக கொடிகளையும் ஏந்தி இருந்தனர்.

தென்சென்னை (வடக்கு)

தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.பி.கலைராஜன் எம்எல்ஏ ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் தலைமை வகித்தார்.  சென்னை மாநகராட்சி மேயர்  சைதை துரைசாமி, மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அண்ணாசாலை கெயிட்டி தியேட்டர் அருகே பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே டேம்ஸ் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரிய தலைவரும், மாவட்ட மகளிரணி செயலாளருமான சரஸ்வதி ரங்கசாமி, பகுதி செயலாளர்கள் அலிகான் பஷீர், வீடியோ சரவணன், வெங்கடேசன், நுங்கை மாறன், மண்டல குழு தலைவர் சக்தி, கவுன்சிலர்கள் பி.சின்னையன், எல்ஐசி மாணிக்கம், தி.நகர் சத்யா, கற்பகம் மற்றும்  மெர்குரி மணி, தி.நகர். கே.ஆறுமுகம் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

வடசென்னை (வடக்கு)

வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கொருக்குப்பேட்டை ஐஓசி எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெற்றிவேல், ஜேசிடி பிரபாகர் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுதி செயலாளர் சந்தானம், மண்டல குழு தலைவர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் சசிரேகா, சசிகலா மற்றும் எஸ்.பி.எஸ்.ராஜா, முரளி முருகன், வெங்கடேசன், ரவி, ஏழுமலை, மதுரைவீரன், ரவிராஜன், கே.எஸ்.மணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க வை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

வடசென்னை (தெற்கு)

இதே போல வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் தலைமையில் மாவட்ட செயலாளர் புரசை கிருஷ்ணன் முன்னிலையில் மெமோரியல் ஹால் அருகே நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் நா.பாலகங்கா எம்பி, எம்எல்ஏக்கள் பழ.கருப்பையா, நீnullலகண்டன், முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் மற்றும் இரா.பழனி, சுகுமார், மகிழ் அன்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் கண்டன அட்டைகள் கொடிகளை ஏந்தி ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்