முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியரசுக்கு ஆதரவை வபாஸ் பெற தயாரா? பா.ஜ.க

புதன்கிழமை, 30 மே 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.31 - பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க., மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற தயாரா என்று பாரதிய ஜனதா கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா, அ.தி.மு.க. மட்டுமல்லாது கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வும் திரிணாமூல் காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தின. 

இதுகுறித்து பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் மட்டும் போதாது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து இந்த கட்சிகள் விலக தயாரா என்றும் கூறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டும்போது ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கூறியுள்ளது. நாட்டு மக்களின் நலன்களுக்காக கூட்டணி கட்சிகள் எழுப்பும் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகி விட வேண்டும் என்று தி.மு.க. வையும் திரிணாமூல் காங்கிரசையும் பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். மத்தியில் உள்ள கூட்டணி அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து ரூடியிடம் நிருபர்கள் கேட்டதற்கு இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றார். பெட்ரோல் விலை உயர்வுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வுக்கும் பொறுப்பு உள்ளது. அரசின் ஒரு அங்கமாக கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. அதனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணி கட்சிகளுக்கும் சமமான பங்கு உண்டு என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது என்றும் ரூடி கூறினார். கூட்டணி கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்ய முடியாது. அதனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணி கட்சிகளும் பொறுப்பு ஏற்காமல் ஒதுங்கிக்கொள்ள முடியாது. விலை உயர்வுக்கு கூட்டணி கட்சிகளும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். திரிணாமூல் காங்கிரஸ் பேரணி நடத்தியதையும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் குறிப்பிட்ட ரூடி, அவ்வாறு செய்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்ற தி.மு.க.வின் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும். அப்படி செய்தால் அதேமாதிரி இதர கூட்டணிகட்களும் நினைக்கலாம். மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைத்தால் ஆதரவை வாபஸ் பெற்றால் அது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என்று ரூடி கூறியுள்ளார். 

ஆனால் பெட்ரோல் விலை உயர்வைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று கூறவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!