முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியரசை கண்டிப்பதுபோல கருணாநிதி நாடகம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.1 - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா சார்பில் நாடு முழுவதும் நடந்த பந்த்தில் சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன் உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா சார்பில் நாடு தழுவிய `பந்த்' நேற்று  நடந்தது. தமிழ்நாட்டிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்து இருந்தது. சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை அருகே பாரதீய ஜனதா கட்சியினர் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 100​க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நடுரோட்டில் அமர்ந்து பெட்ரோல் விலையை வாபஸ் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். சில தொண்டர்கள் ஆவேசத்துடன் சோனியா உருவப்படத்தை கிழித்து வீசினார்கள். சிலர் ரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கட்சி தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், சுந்தரமூர்த்தி, ராஜசிம்மன், எஸ்.என். பாலாஜி, டால்பின் ஸ்ரீதர், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், மகளிர் அணி நிர்வாகி சரளா, தனசேகரன் உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி ராயப்பேட்டை நியூ கல்லூரி எதிரே மாநகராட்சி சமூக கூடத்துக்கு கொண்டு சென்றனர். 

கைது செய்யப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:​ மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்த்தப் பட்டுள்ளது. மத்திய அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டு களில் 8 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. ஏழை, நடுத்தர மக்களை நசுக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை முற்றிலு மாக வாபஸ் பெறவேண்டும். அதுவரை பாரதீய ஜனதா தொடர்ந்து போராடும். தி.மு.க. தலைவர் கருணாநிதி பெட்ரோல் விலை உயர்வுக்காக மத்திய அரசை கண்டித்ததைபோல் ஒரு நாடகம் நடத்தி மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார். இது மக்களுக்கும் தெரியும் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்