முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.1 - பெட்ரோல் விலையை குறைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி அதுகுறித்து தாக்கலான பொதுநலன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சமீபத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50-க்கு உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், பெட்ரோல், டீசல் பயன்பாடு மிகவும் அத்தியாவசிய தேவை ஆகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு மத்திய அரசாங்கம் கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் உயர்த்தி வருகிறது.

நம் நாட்டின் மொத்த எண்ணெய் தேவை எவ்வளவு? உள்நாட்டு உற்பத்தி என்ன? பற்றாக்குறை எவ்வளவு? வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு இறக்குமதி செய்யப்படுகிறது? என்ற தகவல்களை எல்லாம் மத்திய அரசு தெரிவிப்பது கிடையாது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் இருந்து மத்திய அரசு என்ன விலைக்கு கச்சா எண்ணெயை கொள்முதல் செய்கிறது? சுங்கவரி, எக்சைஸ் வரி எவ்வளவு விதிக்கப்படுகிறது? என்ற தகவலையும் தருவது இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் கடைசியில் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். அதுவும் ஏழை எளிய மக்கள்தான். பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும், பெட்ரோல் டீலர்களுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகை  அனைத்து சுமைகளையும் ஆகிய சாதாரண மக்கள்தான் சுமக்கின்றனர்.

கடந்த 23ஆம் தேதி அன்று நள்ளிரவு மத்திய அரசு திடீரென பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதன் விளைவாக, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை 10 மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஆனால், மத்திய அரசோ, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து விட்டது. அதன்காரணமாகத்தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது'' என்று சொல்லிக்கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறது. மத்திய அரசின் தவறான நிர்வாகத்திற்கும், திறமையின்மைக்கும் இதுவே சான்று.

மத்திய அரசாங்கம் நாட்டு மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதா? இல்லை எண்ணெய் நிறுவனங்களின் ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதையும் டீசல் விலையை உயர்த்த உத்தேசித்து இருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயற்கையாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு பங்குகளின் உரிமையாளர்களும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகிக்காமல் தங்கள் கடைகளை மூடிவிட்டார்கள். திறந்துள்ள பங்குகளில் பெட்ரோல்​டீசல் போடுவதற்காக வாகனங்கள் நீண்ட கியூ வரிசையில் நின்றுள்ளன.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு பெட்ரோல்​டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த 28-ந்தேதி மனு அனுப்பினேன். பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசாங்கம் தவறான ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறது. 

எனவே, கடந்த 23 ஆம் தேதி உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை திரும்பப் பெறவும், தமிழ்நாட்டில் தட்டுப்பாடு இல்லாமல் பெட்ரோல்​டீசல் கிடைக்க நடவடிக்கை எடுத்திடவும் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில நேற்று  விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவதகிருஷ்ணன் ஆஜரானார் .

இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று  தீர்ப்பளித்தனர். அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர். தீர்ப்பில் நீதிபதிகள், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்திருப்பதாக தலைமை அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல் விலை உயர்வை  எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம்  தலையிட அதிகாரம் இல்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி  மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago