முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., - ஆஸ்திரேலியா தொடர் ஐ.அ.குடியரசில் நடக்குமா?

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லாகூர், ஜூன். 1 - பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு குடிய ரசில் நடைபெறுமா? ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஐக்கிய அரபு குடியரசி ல் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலா ம் என்று கூறப்படுகிறது. 

விரைவில் ஐக்கிய அரபு குடியரசிற்கு சென்று போட்டி நடத்தும் இடங்கள் குறி த்து முடிவு செய்வேன் என்று பி.சி.பி. டைரக்டரான (ஆப்பரேசன் சர்வதேச கிரிக்கெட்) இன்டிகாப் ஆலம் தெரிவி த்தார். 

மேலும், இந்த ஒரு நாள் தொடர் 5 முத ல் 7 போட்டிகள் கொண்ட டி -20 போ  ட்டிகளாக மாற்றப்படலாம் என்றும் டைரக்டர் ஆலம் கூறினார். 

தவிர, இதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், நாங்கள் இது குறித்து ஐ.சி.சி.யிடம் பேச இருக் கிறோம் என்றும் ஆலம் நிருபர்களிடம் தெரிவித்தார். 

பி.சி.சி.ஐ.யின் அழைப்பின் பேரில் ஐ. பி.எல். இறுதிப் போட்டியை பார்க்க பி.சி.பி. சேர்மன் ஜகா அஸ்ரப் சென் னை வந்திருந்தார். அப்போது இந்தத் தொடர் இந்தியாவில் கூட நடத்தப்பட லாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ் தான் அணி பங்கேற்பது, அடுத்த ஐ.பி. எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்க ள் பங்கேற்பது, இந்தியா மற்றும் பாகி ஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடை யே கிரிக்கெட் போட்டிகளை நடத்து வது ஆகியவை குறித்து உயர் மட்டக் குழுவினர் பி.சி.சி.ஐ. அதிகாரிகளை சந்தித்து விரைவில் பேச்சு வார்த்தை நட த்த இருக்கின்றனர் என்று மூத்த பி.சி.பி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சர்வதேச போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். எனவே பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரே லிய அணிகளுக்கு இடையேயான தொடரை இந்தியாவில் நடத்துவது குறித் து பேசப்படாது என்றும் மற்றொரு அதிகாரி கூறினார். 

மேலும், அடுத்த மாதம் கோலாலம்பூ ரில் ஐ.சி.சி.யின் கூட்டம் நடக்க இருக் கிறது. இதில் இரு நாடுகளுக்கு இடை யே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற் றம் கிடைக்கும் என்றும் அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்