முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை 3 -வது முறையாக இறுதிக்கு தகுதி

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். - 30 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதிச் சுற்றில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3 -வது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், தில்ஷான், கேப்டன் சங்கக்கரா மற்றும் தரங்கா ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்குப் பக்கபலமாக சமரவீரா, சமரசில்வா மற்றும் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் ஆகியோர் ஆடினர்.  முன்னதாக பெளலிங்கின் போது இலங்கை வீரர்கள் நன்கு பந்து வீசி நியூசிலாந்து அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினர். மலிங்கா மற் றும் மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு பக்கபலமாக முரளீதரன், ஹெராத் மற்றும் தில்ஷான் ஆகியோர் பந்து வீசினர். 

உலகக் கோப்பைக்கான முதல் அரை இறுதிப் போட்டி கொழும்பு நக ரில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 217 ரன்னில் சுருண்டது. 

நியூசிலாந்து அணி தரப்பில், ஸ்டைரிஸ் அதிகபட்சமாக 77 பந்தில் ரன் னை எடுத்தார். தவிர, குப்டில் 65 பந்தில் 39 ரன்னையும், டெய்லர் 55 பந்தில் 36 ரன்னையும், வில்லியம்சன் 16  பந்தில் 22 ரன்னையும், ரைடர் 34 பந்தில் 19 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான  மலிங் கா 55 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். முன்னணி சுழற் பந் து வீச்சாளரான மென்டிஸ் 35 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். முரளீதரன் 42 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஹெராத் மற்றும் தில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இலங்கை அணி 218 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை நியூசிலாந்து அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 47.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 220 ரன்னை எடுத்தது. 

இதனால் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்த முதல் அரை இறுதியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்  மூலம் இலங் கை அணி 3 -வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறி ப்பிடத்தக்கது. 

இலங்கை அணி தரப்பில், தில்ஷான் அதிகபட்சமாக 93 பந்தில் 73 ரன் னை எடுத்தார். கேப்டன் சங்கக்கரா 79 பந்தில் 54 ரன்னை எடுத்தார். தரங்கா 31 பந்தில் 30 ரன்னை எடுத்தார். தவிர,சமரவீரா 23 ரன்னையு ம், மேத்யூஸ் 14 ரன்னையும், சமரசில்வா 13 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், தில்ஷான், தரங்கா மற்றும் கேப்டன் சங்கக் ககரா ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு நல்ல அடித்தளத் தை அமைத்துக் கொடுத்தனர். 

பின்பு இடையில் அந்த அணி சிறிது தடுமாறியது. மேற்படி மூவர் ஆட்டம் இழந்ததும் ரன் ரேட் குறைந்தது. கடைசி 10 ஓவரில் நியூசிலாந்து அணி கடும் நெருக்கடியை அளித்தது. அந்த நிலையில் சமரவீரா, சமர சில்வா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வெ ற்றி பெற வைத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சங்கக் கரா தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்