முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் நீடிப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இது குறித்த சென்னை துறைமுகத்துக்கு தினமும் கண்டெய்னர் லாரிகள் ஏராளம் வந்து செல்கின்றன. இந்த லாரிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி துறைமுகத்துக்குள் அனுமதிக்கின்றனர். 

சோதனையில் ஏதாவது வித்தியாசம் காணப்பட்டால் அந்த லாரிகளை துறைமுகத்துக்குள் அனுமதிக்கமாட்டார்கள். இதேபோல் நேற்று முன்தினம் இரவு வந்த கண்டெய்னர் லாரியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது பில் நம்பரும், சரக்கு பெட்டக நம்பரும் வேறுபட்டு இருந்ததால் லாரியை துறைமுகத்தில் அனுமதிக்கவில்லை. 

இதனால் டிரைவர்களுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு காரணமாக கண்டெய்னர் லாரிகள் துறைமுகத்துக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டன. சுமார் 1000​த்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாததால் துறைமுக ஏற்றுமதி இறக்குமதி பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது.

நேற்று 2​வது நாளாக 2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் ஓடாமல் எண்ணூர் வரை அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் கப்பலில் அனுப்ப முடியாமல் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்