முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணாநீர் ஊத்துக் கோட்டை வந்தடைந்தது

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூன்.2 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கண்டலேறு அணையிலிருந்து, ஆந்திர அரசு திறந்து விட்ட, குடிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு நேற்று வந்தடைந்து. இது குறித்த விபரம் வருமாறு:-  ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணாநீர், நேற்று பிற்பகல் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு வந்தது. கிருஷ்ணா குடிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படும். இந்த தண்ணீர் ண்டி ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு, சென்னை மாநகரில் குடிநீருக்குப் பயன்படுத்தப்படும்.

ஆண்டுதோறும் ஜனவரியிலேயே கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு 3 டிஎம்சி சேதாரம் போக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தரவேண்டும். ஆனால், நவம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள வரதய்யாபாளையம் அருகே உப்பளமடுகு பகுதியில் கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைந்தது.இதனால் 2012 ஜனவரியில் தண்ணீர் திறக்க முடியவில்லை. இந்நிலையில், ரூ.50 லட்சம் செலவில் கிருஷ்ணா கால்வாயை ஆந்திர அரசு சீரமைத்தது.

இதையொட்டி தமிழகத்துக்கு தண்ணீரை வழங்க வேண்டும் என கடந்த மார்ச் 23​ம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஆந்திர மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வழக்கமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டவுடன், தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக 152 கி.மீ. தூரத்தை கடந்து 5 அல்லது 6 நாள்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்டுக்கு வந்துவிடும்.

அண்மையில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட மதகு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் தெலுங்கு கங்கை கால்வாயில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 5 நாள்களில் வரவேண்டிய தண்ணீர் இந்த முறை தாமதமாக வருகிறது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி தமிழக எல்லையான ஜீரோ பாயின்டில் இருந்து 18 கி.மீ. தொலைவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று தண்ணீர் வந்தடையும் என தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டலேறுவில் இருந்து 152 கி.மீ. தூரம் கடந்து வெள்ளிக்கிழமை நேற்று பிற்பகல்  தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு தண்ணீர் வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.

சென்னைக்கு குடிர் வழங்கும் ஏரிகளின் நிலவரம் வருமாறு:-

இதனை வியாழக்கிழமை காலை நிலவரப்படி ண்டி ர்த்தேக்கத்தில் 2 ஆயிரத்து 87 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கத்தில் ஆயிரத்து 335 மில்லியன் கன அடி, புழலில் ஆயிரத்து 190 மில்லியன் கன அடி, சோழவரத்தில் 83 மில்லியன் கன அடிநீர் இருப்பில் உள்ளது. கண்டலேறு அணையிலிருந்துவரும் தண்ணீரால் அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்