முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - நடைபெற்று முடிந்த ஏப்ரல் 2012 எஸ்.எஸ்.எல்.சி (புதிய பழைய பாடத்திட்டம்) ஓ.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ - இந்தியன் பொதுத் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் 4.6.2012 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in  என்ற வலைதளத்தில் காணலாம்.

மாவட்ட அளவிலான மாணவர்களின் தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள தேசிய தகலியல் மையம் மூலம் வழங்கப்படும்.

கணினி வசதி கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உதவியுடன் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கணினி வசதி இல்லாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உதவியுடன்  கணினி வசதி கொண்ட அருகாமையிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்டக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு தேவையான அறிவுரைகளை மேற்குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மதிப்பெண் சான்றிதழ்கள் 21.6.2012 அன்று அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும் தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago