முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன்-ஜூலையில் நடைபெறும்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - ஏப்ரல் 2012 எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ-இந்திய தேர்வுகள் தேர்வெழுதி தோல்வியுற்ற, பதிவு செய்து வருகை தராத தேர்வர்கள் அனைத்து பாடங்களை தேர்வெழுத விரும்பும் பள்ளி மற்றும் தனித் தேர்வர்களிடமிருந்து ஜூன், ஜூலை 2012 சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏப்ரல் 2012-ல் தேர்வு எழுத தோல்வியுற்ற பள்ளித் தேர்வர்கள், பதிவு செய்து வருகை தராத தேர்வர்கள் ஜூன், ஜூலை 2012-ல் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்வில் தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதலாம். பள்ளி மாணவராகத் தேர்வு எழுதியவர்கள் அவரவர் பள்ளி மூலமாக 5.6.20.12 முதல் 7.6.20.12 வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பள்ளிகளிலேயே விண்ணப்பங்களை நேரில் ஒப்படைக்க வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளித் தேர்வர்களும் (சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட) தேர்வு கட்டணத் தொகையை பணமாக அவரவர் பள்ளித் தலைமையாசிரியரிடம் செலுத்த வேண்டும். தேர்வர்கள் ஏப்ரல் 12012 ல் தேர்வெழுதிய பதிவெண்ணை விண்ணப்பத்தில் அவசியம் குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளியில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் 7.6.20.12.

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை

ஏப்ரல் 2012 -ல் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத /பதிவு செய்து வருகை புரியாத தனித்தேர்வர்கள் தோல்வியுற்ற /வருகை புரியாத அனைத்து பாடங்களையும் ஜூன், ஜூலை 2012 சிறப்புத் துணைத் தேர்வில்தேர்வெழுத, மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள் /முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்கள் /மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் 5.6.2012 முதல் 7.6.2012 வரை விண்ணப்பப்படிவம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் பதிவஞ்சலிலோ அல்லது நேரிலோ ஒப்படைக்கலாம். மாநிலத்திலுள்ள அனைத்து தனித் தேர்வர்களும் (சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட) தேர்வுக்கட்டண தொகையை கருவூல செலுத்து சீட்டு மூலம் கருவூலத்தில் செலுத்தி கருவூல அசல் சலானை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்தனுப்புதல் வேண்டும். வங்கி கேட்பு வரைவோலை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 7.6.12 மாலை 5.30 மணி வரை.

 

அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்விற்கு பதிவு செய்து வகுப்புகளுக்குச் சென்று, ஆனால் செய்முறைத் தேர்வு எழுதாத தேர்வர் மற்றும் ஏப்ரல் 2012 பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள் மட்டுமே தற்போது உடனடித் தேர்வில் செய்முறைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். செய்முறைத் தேர்வு தொடர்பான விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் தொடர்பு கொள்ள இத்தேர்வர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகங்களில் செய்முறைத் தேர்விற்கு பதிவு செய்யாத தேவர்கள் தற்போது உடனடித் தேர்வு எழுத இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.   ஓ.எஸ்.எல்.சி. - அனைத்து பாடங்களுக்கும் - ரூ.125., மெட்ரிகுலேசன் - ஒரு பாடத்திற்கு கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்திற்கும் மேற்காண் தொகையுடன் ரூ.100 கூடுதலாக செலுத்த வேண்டும் - ரூ.135., ஆங்கிலோ -இந்திய தேர்வு - ஒரு பாடத்திற்கு கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்திற்கும் மேற்காண் தொகையுடன் ரூ.50 கூடுதலாக செலுத்த வேண்டும் - ரூ.85., 

சிறப்பு துணைத் தேர்வுகளுக்காந கால அட்டவணை

புதிய /பழைய பாடத்திட்டம் எஸ்.எஸ்.எல்.சி. - 25.6.2012 முதல் 2.7.2012 முடிய. பழைய திட்டம் ஓ.எஸ்.எல்.சி.  - 25.6.2012 முதல் 3.7.2012 முடிய. மெட்ரிகுலேஷன் - 25.6.20.12 முதல் 5.7.20.12 முடிய. ஆங்கிலோ -இந்திய தேர்வு - 25.6.12 முதல் 4.7.12 முடிய அரசு தேர்வுகள் துறை செய்திக்குறிப்பில்  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago