முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஜீவானந்தம் தாயார் மறைவு: முதல்வர் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - மக்கள் குரல் செயல் இயக்குநர் பி.ஜீவானந்தத்தின் தாயார் மீனம்மாள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-  மக்கள் குரல் நாளிதழின் செயல் இயக்குநர் பி.ஜீவானந்தத்தின் தாயார் திருமதி. மீனம்மாள் இன்று 2.6.2012 காலை காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

திருமதி. மீனம்மாளை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்