முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்க பாடுபடுவேன் அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கே.போஸ் பிரசாரம்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 30 - மதுரை வடக்கு தொகுதிமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க பாடுபடுவேன் என்று அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கே.போஸ் பேசினார். மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கே.போஸ் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று 13-வது வார்டு பகுதியான பீ.பி.குளம் பகுதியில் வீதி,வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்களிடம் ஏ.கே.போஸ் பேசியதாவது; தி.மு.க.ஆட்சியில் மின்சார உற்பத்தி இல்லை.இதனால் தமிழகம் முழுவதும் மின்வெட்டு உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் ஒரு மணிநேரம் கூட மின்தடை ஏற்பட்டது இல்லை. எனவே மீண்டும் அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் மின்தடை இருக்காது.

மாணவ-மாணவிகளுக்கு இலவச கம்யூட்டர், அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசி, இளம்பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று அ.தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சொன்னதை ஆற்றில்,வல்லமை உள்ளவர் ஜெயலலிதா. அவர் நிச்சயம் ஏழை மக்களுக்கு வாழ்வு தருவார். எனவே மக்கள் நிம்மதியாக வாழ சட்டம் ஒழுங்கு சீராக இருக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவேண்டும்.

இவ்வாறு வேட்பாளர் ஏ.கே.போஸ் பேசினார். 

வேட்பாளருடன் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதிசெயலாளர் ஜெயவேல், வட்டசெயலாளர் கணேசன், தொகுதி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சுப்பு, வக்கீல்கள் பாலசுப்பிரமணி, அசோகன், பேரவை பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டணி கட்சி நிர்வாகிள் ஞானசேகரன், பகவதி, நாகராஜன், திலகர், ராதா உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago